Header Ads



வரலாற்றிலேயே முதன்முறையாக, 'ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்' க்கு இளம் தலைவர் நியமனம்


விரிந்த மார்பும்,  அகன்ற தோளும் விரைந்து நடக்கும் ஆற்றலும் உள்ள ஓர் இளைஞன், தன் ஆற்றலையும் வலிமையையும் மறந்து தவழ்ந்து தவழ்ந்து சென்றுகொண்டிருக்கிறான்.

இந்த இளைஞனின் ஆற்றலையும் வலிமையையும் அவனுக்கு உணர்த்தி, அவனை யாரேனும் நிமிர்ந்து நடக்கச் செய்வார்களா என்று பலரும் கனவுகளோடு ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஏக்கம் இன்று நிறைவேறியுள்ளது. அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது.

ஆம்..

“ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்” எனும் பேரியக்கத்திற்கு அகில இந்தியத் தலைவராக (அமீரே ஜமாஅத்) சஆதத்துல்லாஹ் ஹுசைனி தேர்வாகியுள்ளார்.

நல்ல படிப்பாளி. சிந்தனையாளர். சிந்தாந்த வலிமை நிறைந்தவர். அறிவாற்றலும் செயல்துடிப்பும் கொண்ட இவர், உருது மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர். பன்னூலாசிரியர். வயது 46.

Strategy of Indian Muslims,
Islam, Muslim and Technology,
Globalization and Muslim Youth, 
Milestones,
Postmodernist challenges and Islam,
Islamic Movement in women,
Globalization and capitalistic imperialism,

ஆகியவை இவர் எழுதியுள்ள குறிப்பிடத்தக்க நூல்கள்.

ஜஇஹி வரலாற்றிலேயே வயதில் இளையவர் ஒருவர் அகில இந்தியத் தலைமைப் பொறுப்புக்கு வருவது இதுவே முதல் முறை.

2019 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையுள்ள நான்கு ஆண்டுகளுக்கு இவர் தலைவராகப் பணியாற்றுவார்.

புதிய தலைவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இளம் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள இந்தப் பெரும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான ஆற்றலையும் சூழலையும் வல்ல இறைவன் அவருக்கு வழங்கிடவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

-சிராஜுல்ஹஸன்

1 comment:

  1. ஒண்ற மட்டும் நினைவில் வைத்துக்கொல்லுங்கல்.நாம் அனைவரும் ஒரு இறைவனை,இருதி தூதர் முஹம்மத் நபி அவர்கலயும் பின்பற்றி வாழ்பவர்கள்.ஆனால் ஒரு சில மிகச் சிரிய கருத்து வேறுபாடுகலுக்காக பல இயக்கங்கள் ஒருவாக்கிக் கொண்டு பிரிந்து இருப்பதனால்தான்....நம்மை,Islam மார்கதின் எதிரிகல் திட்டம் போட்டு வீழ்துகின்ரனர்.தயவு செய்து இயக்கம் சம்பந்தமான எந்த பதிவயும் இடாதீர்கல்.இனியாவது இயக்கம்,பிரதேச வாதம் என்பவைகலை விட்டு விட்டு,நாம் அனைவரும் Muslim என வீரத்துடன் எழுங்க

    ReplyDelete

Powered by Blogger.