Header Ads



நானும் தௌஹீத்வாதிதான்...!

தௌஹீத்வாதி என்றால்.....

👉 அல்லாஹ் ஒருவனையே வணங்குபவன், அவனுக்கு யாதொன்றையும் இணைவைக்காதவன்.

👉 அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் தன் வாழ்வியல் வழிகாட்டியாக ஏற்று எடுத்து நடப்பவன்.

👉 இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அபத்தங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துபவன்.

👉 மக்களுக்கு நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவன்.

👉 படைத்தவனுக்கு மட்டுமே பயந்து சரியை சரியென்றும் பிழையை பிழை என்றும் தைரியமாய் எடுத்துச் சொல்பன்.

👉 துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு துவண்டு போகாமல் அனைத்தும் ஏகனின் நாட்டம் என்று பொறுமையாய் ஏற்றுக் கொள்பவன்.

👉 இறைவனின் நாட்டம் இன்றி எவராலும் எதுவும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று உறுதியாய் நம்புபவன்.

👉 அல்லாஹ்வின் மீது மட்டுமே தவக்குல் வைப்பவன்.

👉 உயிருக்குப் பயந்து உரிமைகளை/ மார்க்கத்தை விட்டுக் கொடுக்காதவன்.

👉 தான் ஒரு குற்றமும் செய்யாமல் யாரோ செய்த குற்றத்திற்காய் ஓடி ஒழிந்து கொள்ளாதவன்.

👉  செய்யாத தவறுக்காய் தலை குணிந்து கூணிக்குறுகி கூஜா தூக்காதவன்.

👉 இரக்க குணம், மனித நேயம் அனைத்தும் கொண்டவன் ஆனால் தனித்துவம் தன்மானம் விட்டுக் கொடுக்காதவன்.

👉  அநியாயமாய் நசுக்கப்படுகையில், உரிமைகள் பறிக்கப்படுகையில் நல்லினக்கம் பேசிக் கொண்டு நாவன்மை இழக்காமல், குனூத் மட்டும் ஓதிக் கொண்டு வீட்டுக்குள் பதுங்காமல் உரிமையை பெற்றுக்கொள்ள உரிய முறையில் போராடி அரசியல் யாப்பின் படி நீதியை நிலை நாட்டி வாழும் நாட்டின்‌ இறைமையைக் காப்பவன்.

👉 வருமுன் காப்போம் என்று போலி நியாயம் சொல்லி மார்கத்தின் அடையாளங்களை (தாடி, வீட்டில் உள்ள இஸ்லாமிய நூல்கள், சஞ்சிகைகள், அரபு எழுத்தனி அலங்காரங்கள் போன்றவற்றை) அழித்திடத் துணியாதவன்

👉 சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்து இயக்க வெறி கொண்ட சுய பழி தீர்த்துக் கொள்ளாதவன்.

👉 அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண எள்ளளவும் எண்ணம் கொள்ளாதவன்.

👉 பிறர் மானம் காப்பவன்,‌ பிறர் துயர் துடைப்பவன்.

👉 மனித குல நின்மதிக்காய் மனதார உழைப்பவன்.

👉 கொலை, கொள்ளை, சூது, களவு, வஞ்சகம், வட்டி, விபச்சாரம், வரதட்சனை, மது, குலபேதம், ஏமாற்று, மோசடி, துரோகம், களுத்தறுப்பு, காட்டிக் கொடுப்பு,‌ தீவிரவாதம் அத்தனைக்கும் எதிரானவன்.

👉 தீவிரவாதத்திற்கு எதிரானவன் வீண் பழிக்கு  அஞ்சாதவன்.

👉 வாழ்கையின் விரக்தியில் மட்டுமல்ல, எந்நிலையிலும் எச்சந்தர்பத்திலும் எக்களத்திலும் தற்கொலை ஹராம் என்ற உறுதியில் தளராதவன்.

👉 பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், நோயாளிகள், வணக்கஸ்தலங்கள் மட்டுமல்ல பயன் தரும் மரங்களுக்குக்கூட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பக்குவப்படுத்தப்பட்டவன்.. அது போராட்டக்களமாயினும் சரியே...

👉சுருங்கச் சொன்னால் வஹ்ன் (உலக ஆசையும் மறுமை மீதான பயமும்) எனும் புற்றுநோய்யால் தீண்டப்படாதவன் மரணத்திற்கு அஞ்சாதவன்

👉 மொத்தத்தில் அமைதியைப் போதித்து சமத்துவம் பாதுகாக்கும் சாந்தி மார்க்கம் இஸ்லாத்தில் வாழ்ந்து இஸ்லாத்திலே மரணித்து (தற்கொலை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும்) மறுமையில் சுவனம் செல்ல, அற்ப உலகத்தில் அனைத்தையும் சகித்துக் கொண்டு இயற்கை மரணம் வந்து இறைவனடி சேரும் வரை பொறுமையோடு போராடிக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் தௌஹீத்வாதியே!

நானும் முஸ்லிமே நானும் தௌஹீத்வாதியே...

ஜெமீல் எம் சஜா (கபூரி)

9 comments:

  1. The connotation of this doctrine and its meaning differ from groups to groups. That is the bottom line of difference. it is not 100% difference but to some extent meaning differs that is why Zahran and his cohort could not get on with others..

    ReplyDelete
  2. எந்த தௌஹீத்காரன் இதையெல்லாம் எடுத்து நடக்கின்றான். இதற்கு மாற்றமாகத்தான் எல்லாம் செல்கின்றன.

    ReplyDelete
  3. வசனங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு செய்கிற செயல்கள் தான் மிகவும் மோசமாக இருக்கிறது.நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும், தவ்ஹீத்வாதிகள் இலங்கைக்கு வந்ததனால் ஏற்பட்ட விளைவு தான் நாங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்

    ReplyDelete
  4. அழகான முறையில் இஸ்லாத்தை பின்பற்றிப் கொண்டு அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த எம் மக்களை. தௌகீத் என்ற பெயரில் வெளிநாட்டு பணத்துக்காக வேளை செய்துகொண்டு எனக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தி ஏனைய சமூகத்தினருடனும் முறன்பாடுகளை தோற்றுவித்து எம் சமூகத்தை தனிமைப்படுத்தி சில அப்பாவி இளைஞர்களை கடும்போக்குவதிகளாக மாற்றி ஒட்டுமொத்த சமீகத்தையும் படு பாதாளத்தில் தள்ளி விட்டு இப்போது வெட்கம் இல்லாமல் வீராப்பு பேசுகின்றீரா? இனிமேல் உங்கள் மாவு வேகாது. ஊர் ஊராக அடித்துத்துரத்தப்படுவீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. 👉 முஸ்லிம்களுக்கு காபிர்,முஷ்ரிக் என பதுவாகொடுப்பவன்.

    👉 முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினை உண்டாக்க்கூடியவன்.

    ReplyDelete
  6. is there any new religion found in the name of Thawheed? then what does islam mean? you rubbish first get to know the meaning of islam. the meaning of islam is include even thawheed and etc. then why you want to identify that your thawheed and some one else saying im so on so. what this rubbish all? is this a way prophet muhammad (PBUH) convey the message of allah to the human being?

    ReplyDelete
  7. அறியாமையில் இருந்து மீண்டு வந்ததும் இந்த தௌஹீத்தாலதான்., இல்லை என்றால் இன்னும் கத்தம்பாத்திகா, சீதணம், ஆண் பெண் கலந்த கொடியேற்றம், அவ்வுலியாக்கு நேர்ச்சை இன்னும் எவ்வளவோ உள்ளது.

    ReplyDelete
  8. தௌஹீத் வாதி என்ற பதம் பயன்படுத்தப்பட்டது, மக்களில் பெரும்பாலானோர் அல்லாஹ் அல்லாதவற்றிடம் பிரார்த்தனை தொடக்கம், நேர்ச்சை வரை செய்து வந்ததாலும், கத்தம், கந்துரி,Birth Day, என்று பித்அத் களையும், பெரியார், தங்கள் என்று மனிதனை கடவுள் அந்தஸ்த்திற்கு கொண்டு சென்றதாலும்தான், மக்களுக்கு மிக அந்நியமாகிப்போன தூய தௌஹீத்தை எடுத்துச்சொல்ல தௌஹீத் வாதிகள் அவசியமானார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.