Header Ads



சவுதி ஆட்சியாளர்களை சந்தித்த கலீபா ஹப்தர், லிபியாவில் நடப்பது என்ன..? எகிப்தும், டுபாயும் எதிரளிகளா..?

லிபிய தலைநகர் திரிபோலிக்கு அருகில் இடம்பெற்ற மோதலில் 21 பேர் கொல்லப்பட்டு மேலும் 27 பேர் காயமடைந்ததாக லிபியாவின் ஐ.நா அங்கீகாரம் பெற்ற அரசு குறிப்பிட்டுள்ளது.

மோதலை உடன் நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு திரும்பும்படி ஐ.நா செயலாளர் நாயகம் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

கலீபா ஹப்தரின் தலைமையிலான கிளர்ச்சிப்படை திரிபோலியை கைப்பற்றும் நோக்கில் கிழக்கில் இருந்து முன்னேறி வருகிறது. அவர் சதி முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக பிரதமர் பாயெஸ் அல் சர்ராஜ் குற்றம்சாட்டி இருப்பதோடு அந்த கிளர்ச்சியாளர்களை படையினர் எதிர்கொள்வார்கள் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் மோதல்களில் கொல்லப்பட்டவர்களில் செம்பிறை சங்க மருத்துவர் ஒருவரும் உள்ளார். தமது படையில் 14 போராளிகளை இழந்ததாக ஜெனரல் ஹப்தரின் படை குறிப்பிட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இரண்டு மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஐ.நா அழைப்பு வித்தபோதும் மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. லிபியாவில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் சர்வதேச நாடுகள் தமது உறுப்பினர்களை வெளியேற்றி வருகின்றன.

2011 ஆம் ஆண்டு முன்னாள் சர்வாதிகாரி முஅம்மர் கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து லிபியாவில் வன்முறைகள் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நீடித்து வருகிறது.

ஜெனரல் ஹப்தரின் இஸ்லாமியவாதிகளுக்கு எதிரான லிபிய தேசிய இராணுவத்திற்கு எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆதரவு அளித்து வருகிறது.

தனது படைகளை திரிபோலியை நோக்கி முன்னேறுவதற்கு ஹப்தர் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

லிபிய முன்னாள் சர்வாதிகாரி முஅம்மர் கடாபி ஆட்சியை பிடிப்பதற்கு ஒரு இராணுவ அதிகாரியாக உதவிய 75 வயது ஹப்தர், பின்னர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து கடாபி அரசுக்கு எதிராக 2011 இல் கிளர்ச்சி ஏற்பட்டபோது ஒரு கிளர்ச்சித் தளபதியாக நாடு திரும்பினார்.

கடந்த வாரம் அவர் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து மன்னர் சல்மான் மற்றும் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2

கிழக்கு லிபி­யாவைத் தள­மாகக் கொண்ட தள­பதி ஹலீபா ஹப்­த­ரினால் தலை­நகர் திரிப்­போ­லியைக் கைப்­பற்­று­வ­தற்கு மேற்­கொள்­ளப்­படும் இரா­ணுவ நட­வ­டிக்­கை­யினை தோஹாவைத் தள­மாகக் கொண்ட முஸ்லிம் அறி­ஞர்கள் அமைப்பு கண்­டித்­துள்­ளது.

இரத்­தத்தை ஓட்­டு­வ­தற்கும், குழப்­பங்­களை பரவச் செய்­வ­தற்கும் லிபிய மக்­களைப் பிரிப்­ப­தற்கும் சில அர­புக்­க­ளிடம் நிதி­யி­னையும் ஆத­ர­வி­னையும் பெற்­றுக்­கொண்­டுள்ள ஹப்தர் தலை­ந­கரை ஆக்­கி­ர­மிப்­ப­தற்கும் அரபு நாடு­க­ளி­னாலும் ஐக்­கிய நாடுகள் சபை­யி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தேசிய இணக்­கப்­பாட்டு அர­சாங்­கத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கும் தலைப்­பட்­டி­ருக்­கின்றார் என முஸ்லிம் அறி­ஞர்­களின் சர்­வ­தேச ஒன்­றியம் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்­ளது.

திரிப்­போ­லி­யி­லுள்ள தேசிய இணக்­கப்­பாட்டு அர­சாங்கம் அரபு லீக் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபை ஆகி­ய­வற்றில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட உறுப்­பு­ரிமை கொண்­ட­தாகும் எனவும் முஸ்லிம் அறி­ஞர்­களின் சர்­வ­தேச ஒன்­றியம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

எனினும் கிளர்ச்­சிக்­கா­ரர்­களின் இரா­ணுவம் மற்றும் படை­யி­னரின் செயற்­பா­டு­களை எதிர்­கொள்ளும் நிலையில் அவை அந்த அர­சாங்­கத்­தினை கைவிட்­டுள்­ள­மை­யினைக் கண்­டித்­துள்ள அவ்­வ­மைப்பு அரபு நாடுகள் சபையும் ஹப்­தரின் தாக்­கு­த­லுக்கு எதி­ரான நிலைப்­பாட்டை எடுக்க வேண்டும் எனவும் வன்­மு­றை­களைத் தோற்­க­டிக்­கவும் ஒற்­று­மையை அடைந்து கொள்­வ­தற்கும் லிபிய மக்­க­ளுக்கு சட்ட ரீதி­யான தன்­மையும் ஸ்திரத் தன்­மையும் கிடைப்­ப­தற்கு போது­மான ஆத­ர­வினை தேசிய இணக்­கப்­பாட்டு அர­சாங்­கத்­திற்கு வழங்க வேண்டும் எனவும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. தேசிய இணக்­கப்­பாட்டு அர­சாங்கப் படை­யி­ன­ரி­ட­மி­ருந்து திரிப்­போ­லியை மீளக் கைப்­பற்­று­வ­தற்­கான இரா­ணுவ நட­வ­டிக்கை ஹப்­த­ரினால் கடந்த வியா­ழக்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

சுமார் நான்கு தசாப்­தங்­க­ளாக அதி­கா­ரத்­தி­லி­ருந்­ததன் பின்னர் ஜனா­தி­பதி முஅம்மர் கடாபி , நேட்டோ ஆத­ர­வு­ட­னான கிளர்ச்­சி­யினை அடுத்து பதவி கவிழ்க்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட 2011 ஆம் ஆண்டின் பின்னர் லிபி­யாவில் நெருக்­கடி நிலை தொடர்கின்றது.

அதிலிருந்து இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் வேறுபாடு அதிகாரப் போட்டியினை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பு ஹப்தருடன் தொடர்புபட்ட கிழக்கு நகரான அல்-பைதாவிலும் மற்றைய தரப்பு திரிப்போலியிலும் இருக்கின்றன.

3 comments:

  1. To the writer's attention:--> UN Secretary General is Antonio Guterres, Mike Pompeo is US Secretary of State. Anyhow to make a long story short, this is another conspiracy by UNO, US, Israel & the West to destroy Libya and rob its Oil & Minerals. Many Arab nations are mere spectators and co-conspirators working alongside the enemies for the destruction of Libya.

    ReplyDelete
  2. Mohammar AL Gadhaffi the former libiyab leader was not a Dictator as you mentioned in this article. He was a genuine leader for Libiyan people. You quote as what American says.

    ReplyDelete
  3. ஆரம்பிச்சிடாங்க....
    தங்களுக்குள் மாறி மாறி அடிபட்டு சாவதென்பது ஆரபியர்களின் பிரதான பொழுது போக்கு போல

    ReplyDelete

Powered by Blogger.