Header Ads



ஜமால் கஷோக்­ஜியின் பிள்­ளை­க­ளுக்கு வீடும், பணமும் வழங்கும் சவூதி அரே­பியா

படு­கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ள­ரான ஜமால் கஷோக்­ஜியின் பிள்­ளை­க­ளுக்கு சவூதி அரே­பியா நட்­ட­ஈடு வழங்கி வரு­வ­தாக வொஷிங்டன் போஸ்ட் கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தி­ருந்­தது.
ஒவ்­வொரு பிள்­ளைக்கும் ஜித்­தாவில் சுமார் 4 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான வீடு முதல் கட்­ட­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு அவர்­க­ளுக்கு மாதாந்த கொடுப்­ப­னவும் வழங்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் வொஷிங்டன் போஸ்ட் தெரி­வித்­துள்­ளது.

ஐந்து இலக்கம் கொண்ட தொகை­யொன்று கஷோக்­ஜியின் இரண்டு மகன்­மா­ருக்கும் ஒரு மக­ளுக்கும் வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் தமது தந்தை கொல்­லப்­பட்­டமை தொடர்பில் பொது மக்கள் மத்­தியில் தொட­ராக அறிக்­கைகள் வெளி­யி­டா­தி­ருப்­பதை உறுதிப் படுத்­து­வ­தற்­கான ஒரு கட்­ட­மா­கவே இவ்­வாறு வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் அது தெரி­வித்­துள்­ளது.

தற்­போ­தைய மற்றும் முந்­தைய சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் மற்றும் கஷோக்­ஜியின் குடும்ப அங்­கத்­த­வர்­க­ளையும் அது மேற்கோள் காட்­டி­யுள்­ளது.
அமெ­ரிக்­காவில் வசித்­து­வந்த வொஷிங்டன் போஸ்ட் பத்­தி­ரி­கையின் பத்தி எழுத்­தா­ள­ர் ஜமால் கஷோக்ஜி கடந்த ஒக்­டோபர் மாதம் துருக்­கியின் இஸ்­தான்­பூ­லி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூத­ர­கத்­தினுள் நுழைந்­ததை அடுத்து படு­கொலை செய்­யப்­பட்டார்.

என்ன நடந்­தது என்­பது தொடர்பில் மாறு­பா­டான கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்த சவூதி அரே­பிய அர­சாங்கம் இறு­தி­யாக கைக­லப்­பினால் இறப்பு நிகழ்ந்­த­தாக ஏற்­றுக்­கொண்­டது.

ஒவ்­வொரு பிள்­ளைக்கும் வீடு­க­ளையும் பத்­தா­யிரம் அமெ­ரிக்க டொல­ருக்கும் அதி­க­மான மாதாந்தக் கொடுப்­ப­ன­வையும் வழங்­கு­வது பெரி­ய­தொரு அநீதி இழைக்­கப்­பட்­ட­மை­யினை ஏற்­றுக்­கொள்­வ­தோடு ஒரு பிழையைச் சரி­செய்யும் நட­வ­டிக்­கை­யு­மாகும் என முன்னாள் அதி­கா­ரி­யொ­ரு­வரால் வர்­ணிக்­கப்­படும் இந்த நட்­ட­ஈடு கடந்த வருட பிற்­ப­கு­தியில் மன்னர் சல்­மா­னினால் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

ஊட­க­வி­ய­லா­ளரின் பிள்­ளை­க­ளுக்கு குருதிப் பண­மா­கவே ஆயி­ரக்­க­ணக்­கான டொலர் தொகை வழங்­கப்­ப­டு­கின்­றது. அத்­தோடு சவூதி அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சிப்­ப­தி­லி­ருந்து அவர்கள் தடுக்­கப்­பட்­டுள்­ளார்கள் எனவும் அப் பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது.
வன்­முறைக் குற்­றங்­களால் அல்­லது இயற்கை அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட வர்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கு­வது அர­சாங்­கத்தின் வழக்­க­மான செயற்­பா­டாகும் என சவூதி அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்­த­தாக போஸ்ட் தெரி­வித்­துள்­ளது.

கஷோக்­ஜியின் குடும்­பத்­தினர் மௌன­மாக இருக்க வேண்டும் என நிர்ப்­பந்­திக்கப் பட்­டுள்­ள­னரா என்­பது தொடர்பில் அவ்­வ­தி­காரி கருத்து வெளி­யிட மறுத்­து­விட்டார்.

இவ்­வாறு உத­வு­வது எமது பாரம்­ப­ரி­யமும் கலா­சா­ர­மு­மாகும் எனவும் இது வேறு எவற்­றோடும் தொடர்பு பட்­ட­து­மல்ல எனவும் அவ்­வ­தி­கா­ரியை மேற்கோள்காட்டி அப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

vidivelli

No comments

Powered by Blogger.