Header Ads



ரணில் அழைப்பு விடுத்தார், மகிந்த கட்டுரைகளை வாசித்துவிட்டு பதவி தந்தார்

பொருத்தமற்றதென உணர்ந்ததாலேயே அரசியலிருந்து விலகியதாக தெரிவிக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட்  கப்ரால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தன்னை அரசியலுக்கு வருமாறு அ​ழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் இணைய ஒளிபரப்பு சேவை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ஹம்பாந்தோட்டை தங்காலை, கணக்காய்வு கற்கைகளை தொடர்ந்தாகவும் நிலையிலேயே, 2005 ஆம் ஆண்டில் மஹிந்த சிந்தனை திட்டத்தை தயாரிக்க அழைப்பு வந்ததாகவும், அதற்கு தான் முன்னர் ஐக்கிய தேசிய கட்சியில் 2000-2004 வரையான காலப்பகுதியில் ஐ.தே.க வின் மாகாண சபை உறுப்பினராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் திட்டங்களை செயற்படுத்தும் அமைச்சின் செயலாளரா பணியாற்றுமாறு அ​ழைப்பு வந்ததென தெரிவித்த அவர்,  அதன் கீழ் 9 மாதங்கள் கடமையாற்றிக்கொண்டிருந்த வேளை   மத்திய வங்கி ஆளுனர் பதவிக்கு நியமிக்கப்பட்​டேன் என்றார்.

இவ்வாறான நிலையில் பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவே தன்னை அரசியலுக்கு வருமாறு அழைத்ததாகவும், முதலில் விருப்படா விட்டாலும், பின்னர் அரசியல் வாதிகளை திட்டித்தீர்த்துக்கொண்டிருப்பதை விடுத்து அரசியலுக்கு வருவது சிறந்ததென தீர்மானித்தே அரசியலுக்கு வந்தேன் என்றார்.

அதனையடுத்தே தனக்கு அரசியல் ​ பொறுத்தமானதல்லவென உணர்ந்ததாகவும், ஐக்கிய தேசிய கட்சின் பொருளாதார கொள்கைளை எதிர்த்தும் அதற்கான தீர்வுகளையும் பத்திரிகைகளில் கட்டுரைகளாக எழுதி வெ ளியிட்டதாகவும் தெரிவித்த அவர் அவற்றை கண்டுகொண்ட பின்பே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அ​ழைப்பு வந்தது என்றார்.  

அதேபோல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமூகமான செயற்பட முடியாதென ​அறிந்துகொண்ட பின்பே ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்றதாகவும், மஹிந்த ஆட்சியின் கொள்கைகள் எனது கொள்கைகளுக்கு பொறுத்தமாக அமைந்திருந்தது என்றார்.

No comments

Powered by Blogger.