Header Ads



தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட, ஜனாதிபதியே காரணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட ஒழுங்கு அமைச்சு உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சை தனது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டமையின் காரணமாகவே தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் காய்நகர்த்தல்கள் ஒவ்வொன்றும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்ததாகவே காணப்படுகின்றன. அதில் ஒரு கட்டமாகவே கடந்த வருடம் எதிர்தரப்பினரூடாக அரசியல் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டதாகவும் இவ்வாறு ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி தனது பொறுப்பை முறையாக நிறைவேற்றாவிட்டால் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பு பாரிய நெருக்கடிக்குள்ளாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. எது எப்படியோ இந்த
    சட்டத்துறைக்கும் நிரு
    வாகத்துறைக்குமான
    தொடர்ச்சியான முரண்
    பாட்டை உள்நாட்டு
    வெளிநாட்டு பயங்கர
    வாதக்குழுக்கள் கச்சி
    தமாக பயன்படுத்திக்
    கொண்டார்கள் என்ப
    துமட்டும் கசப்பான
    உண்மை...

    ReplyDelete

Powered by Blogger.