April 24, 2019

பௌத்த சிங்களவர்களை, புரிந்து கொள்வோமா...?

உலகில் பெளத்தர்களுக்கு செந்தமான நாடுகள்
மிகக் குறைவு இலங்கை உட்பட ஆசிய நாடுகள்
நாடுகள் சிலவற்றில் மட்டுமே அவர்கள்
பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.
முஸ்லிம்கள் போன்று ஒரு சர்வதேச சமூகமல்ல
இந்த சிங்களவர்கள்.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் நல்லவர்கள், தேசப்பற்று மிக்கவர்கள்.
அவர்களுக்கு முஸ்லிம்கள் போன்று பெரிய கனவுகள் எல்லாம் இல்லை.
வெளிநாடு செல்லுதல், வெளிநாடுகளில் குடியுரிமை பெறுதல் போன்ற அவசியங்கள்
எல்லாம் பெருதாக இருப்பதில்லை.
உலக நடப்புகள் குறித்து அவர்களுக்கு அவ்வளவு தெரியாது.
இங்கே இருக்கும் இனவாத ஊடகங்கள், இனவாத 
அரசியல்வாதிகள் சொல்லும் செய்திகளை அப்படியே நம்பி விடுபவர்கள்.
பாதி கட்டிய ஒரு கபராத் பன்னாத வீடும், 
அதில் ஒரு ஒரு டீவியும், ரேடியோவும், பிரயாணம் செய்வதற்கு ஒரு முச்சக்கரவண்டி அதில் "ரத்தரங் அம்மா" இப்படி ஏதாவாது எழுதி வைத்துக் கொள்வது இவ்வளவுதான் அவர்களது கனவு வாழ்க்கை.
அவர்களுக்கு இந்த நாட்டை முஸ்லிம்கள் ஆக்கரமித்து விடுவார்கள் என்ற ஒரு அச்சம்
சில ஆண்டுகளாகவே இனவாத ஊடகங்களால்
ஊட்டப்பட்டு வந்தது.
அவற்றை உண்மைப்படுத்தும் வகையில் நம்மவர்களின் சில செயற்பாடுகள் அமைந்திருந்தமையையும் ஏற்றுக் கொண்டுதான்
ஆக வேண்டும்.
அண்மைக்காலமாக பண்பாடுகளைத்தவிர்த்து அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்
தொடங்கிய முஸ்லிம் சமூகம்.
வீதிக்க்கு வீதி பள்ளிகள்,நினைத்தரவரெல்லாம் மத்ரசா ஆரம்பிக்கும் நிலை. 
உலகில் முஸ்லிம்களுக்கு எங்கு எது நடந்தாலும்
கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்துதல்.
சமூகவலைத்தளங்களில் மடத்தமான கருத்துக்களைப் பகிர்தல்,முச்சக்கரவண்டிகளில்
வாள் மற்றும் அரபு வசனங்களை வரைந்து வைத்தல்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதான சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் விமர்சனங்கள்.
முஸ்லிம் கிரமாங்களின் மாசடைந்த சூழல், வாகன நெரிசல், சட்ட விரோத கட்டிடங்கள்
சட்டத்தை மதிக்காமை போன்ற விடயங்கள்.
போதைப் பொருள் கடத்தல்களில் அடிக்கடி
உச்சரிக்கப்படும் முஸ்லிம் பெயர்கள்.
ஒன்றுக்கு ஒன்பது இஸ்லாமிய இயக்கங்கள், 
சந்திக்குவரும் அவற்றின் உள்வீட்டுப் பிரச்சினைகள்.
அண்மைக்காலமாக பல விமர்சனங்களுடன்
இந்த நாட்டில் இருந்து
வேறுபட்ட சமூகத்தவர் போன்றே வாழ்ந்து வருகிறோம்.
இப்படியான விமர்சனங்களையும் தாண்டி மிக நல்ல சமூகப் பணிகளையும் முஸ்லிம் சமூகம்
இந்த நாட்டுக்கு செய்து கொண்டிருப்பதையும்
மறுக்க முடியாது.
நமது பிள்ளைகளை மூலைச்சலவை செய்யக்கூடிய மத்ரசாக்கள், பாடசாலைகள்,மேலதிக வகுப்புகள்,பயிற்சி நெறிகள் இவை அனைத்திலும் ஒரு தேசிய
பொறிமுறை கொண்டுவரப்பட்டு அவை முறையாக கண்கானிக்கப்பட வேண்டும்.
அவற்றில் இருந்து இந்த தேசத்துக்கு பங்களிப்பு
செய்யக்கூடிய, ஏனைய சமூகங்களை மதிக்கின்ற
அவற்றோடு கலந்து வாழக்கூடிய ஆனால் கரைந்து போகாத ஒரு உன்னதாமன சிந்தனையுள்ள முஸ்லிம் சமூகம் உருவாக்கப்பட வேண்டும்.

Safwan Basheer

8 கருத்துரைகள்:

அரசியல் மோதல்க
ளைத்தவிர்த்து மேற்
படிவிடயங்களை
கவனத்தில்கொள்ள
வேண்டியது சமூகத்
தினதும் அரசாங்கத்
தினதும் அவசரத்
தேவைப்பாடாகும்.

Nicely expressed the facts.

வாழ்த்துக்கள் afwan Basheer, சரியான சமயத்தில் மிகச்சரியான ஆலோசனைகளைப் பதிவு செய்துள்ளீர்கள். உங்கள் ஆலோசனையின் கோட்பாட்டு ரீதியான அம்சங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சமாதான சகவாழ்வை விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாகும்.

உண்மை ,நீண்டகாலமாக நானும் சிங்கள பிரதேசங்களில் கடமைபுரிகின்ற வகையில் அனேகர் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்துடன் அடங்கிப் போய் விடுகின்றனர். மற்றவர்களை இலகுவாக நம்பி விடுகின்றனர். இதனால் அரசியல்வாதிகள் ஏமாற்றி விடுகின்றனர்.

இவர்கள் செய்த தவறு முஸ்லிம்கள் காழி நீதிமன்றம் அமைக்க அனுமதி வழங்கியது, உழ்ஹிய்யா கொடுக்க அனுமதி வழங்கியது, தேவையான அளவு பள்ளி கட்ட அனுமதி வழங்கியது, நோன்பு காலத்தில் உத்தியோகத்தர்கள் நேரத்திற்கு முன் செல்லவும் பாடசாலைகள் மூடவும் அனுமதி வழங்கியது, ஹலால் வங்கி etc.இவற்றைப் பெற்றுக் கொண்டு தலைக்கனம் பிடித்து அகங்காரம் அதிகரித்து பொலிஸுக்குச் சுஜுது செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்.

Post a Comment