Header Ads



குனூத் ஒதுமாறு ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை


22.04.2019

எமது நாட்டில் நேற்றுக் காலை (21.04.2019) நடைபெற்ற மிருகத்தனமான தாக்குதலை அடுத்து, ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை நீங்கி, சுமூக நிலை ஏற்பட்டு, சமாதனமும் சாந்தியும் இன ஜக்கியமும் ஏற்பட முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் கையேந்துமாறும், தமது பாவங்கள் மன்னிக்கப்பட தௌபா, இஸ்திக்பார் போன்றவற்றில் ஈடுபடுமாறும், அத்துடன், தொழுகைகளில் குனூத் அந்நாஸிலா ஒதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது.

மேலும், இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுமாறும், காயமடைந்தவர்கள் மிக விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது.

அத்தோடு, மஸ்ஜித்களில் இமாம்கள் குனூத் அந்நாஸிலாவை ஓதும்பொழுது தேவையான துஆக்களை மாத்திரம் ஓதி சுருக்கமாக அமைத்துக்கொள்ளுமாறும் ஆலோசனை கூறுகிறது.

பின்வரும் துஆக்களை ஓதிக்கொள்ளலாம்.

أللَّهُمَّ إِنَّا نَسْئَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِيْنِنَا وَدُنْيَانَا وَأَهْلِنَا وَمَالِنَا.
أَللّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا أَللّهُمَّ احْفَظْنَا مِنْ بَيْنِ أَيْدِيْنَا وَمِنْ خَلْفِنَا وَعَنْ يَمِيْنِنَا وَعَنْ شِمَالِنَا وَمِنْ فَوْقِنَا وَنَعُوْذُ بِعَظْمَتِكَ أَنْ نُغْتَالَ مِنْ تَحْتِنا.
أَللّهُمَّ آمِنَّا فِي أَوْطَانِنَا وَأَدِمْ نعْمَةَ الْأَمْنِ وَالْإسْتِقْرَارِ فِي بَلَدِنَا.
أَللّهُمَّ مَنْ أَرَادَنَا وَبِلاَدَنَا بِسُوْءٍ فَأَشْغِلْهُ بِنَفْسِهِ وَاجْعَلْ كَيْدَهُ فِي نَحْرِهِ.
أَللّهُمَّ الْطُفْ بِعِبَادِكَ يَا رَحِيْمُ وَاحْفَظْهُمْ وَاكْشِفْ غَمَّهُمْ وَاحْقِنْ دِمَائَهُمْ وَاحْفَظْ مَسَاجِدَهُمْ وَأَمْوَالَهُمْ.
أَللّهُمَّ احْفَظْ سِرِيْلاَنْكَا وَأَهْلَهَا وَاجْعَلْهَا فِي أَمَانِكَ وَضَمَانِكَ وَإِحْسَانِكَ.

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் 
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.