Header Ads



புனித அல்குர்ஆனை தமது உள்ளங்களில், சுமக்கும் உத்தமர்கள் - வரலாற்றுச் சாதனை படைத்த பாகிஸ்தான்


பாகிஸ்தானின் "wafaq ul madaris" 1982 ஆம் ஆண்டிலிருந்து குர்ஆனை முழுமையாக மனனம் செய்யும் ஹாபிழ்களை உருவாக்கி வருகிறது.

அதன் வரிசையில் இந்த வருடத்தோடு மொத்தம் பத்து லட்சம் ஹாபிழ்களை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது இந்த மத்ரஸா.

வஃபாக் உல் மத்ரீஸ் - இன் தலைவர் ஜலாலந்திர் கூறுகையில்;

"நான்கு வயதிலிருந்தே இங்கே குர்ஆனை மனனம் செய்ய குழந்தைகள் சேர்க்கப்படுகின்றன. குர்ஆன் மனனத்தோடு சேர்த்து அந்த குழந்தைகளுக்கு தேவையான இதர கல்விகளான உர்து, ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் பாகிஸ்தானின் அடிப்படை கல்வியும் கற்பிக்கப்படுகின்றன."

"அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட சவுதி அரேபியாவில் கூட ஒரு வருடத்திற்கு 5000 ஹாபிழ்கள் தான் வெளிவருகின்றனர். ஆனால் எங்கள் மத்ரஸாவில் 2019ஆம் ஆண்டிற்கான பெண் ஹாபிழ் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே 14,000" என்று அவர் கூறினார். 

source: The Islamic Information.com - 12/04/2019

10 comments:

  1. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
    (அல்குர்ஆன் : 15:9)

    www.tamililquran.com

    ReplyDelete
  2. மிக பெரும் கண்ணியமான சேவை,வாழ்த்துவோம்

    ReplyDelete
  3. யா ரப்பே அந்த 10 லட்சம் முஹ்மீன்களும் தெரிந்தோ தெரியாமலோ செய்த அனைத்து பாவங்களையும் மன்னித்து உயரதரமான சுவர்க்கத்தை நசீபாக்கிடு யா ரப்பே!!
    அந்த கூட்டத்தில் எங்களையும் சேத்திடுவாயாக!

    ReplyDelete

Powered by Blogger.