Header Ads



பஸ்களில் ஏறுவதற்கும் தடை

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் புர்கா மற்றும் முழுமையாக அடையாளத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளுடன் உட்பிரவேசிக்கக் கூடாது என்ற அறிவுறுத்தல்களை காட்டும் ஸ்டிகர்களை ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார்.

அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியருந்தார்.

அத்துடன் இது சம்பந்தமான வர்த்தமானியானது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகளில் குறித்த ஆடைகளுடன் உட் பிரவேசிக்க  தடை என்ற சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் அறிவுறுத்தல்களை ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. pengale iwenolda bussula poha wendaam .nadandu porungal illavittal anda payanangal poha wendam

    ReplyDelete
  2. Exrimit attack gintota
    Digana no any action for them.
    Rules regulation only for muslims

    ReplyDelete

Powered by Blogger.