Header Ads



பயங்கரவாதிகளினால் மூளைச் சலவை, செய்யப்பட்ட பெண்ணின் கதறல்


பிரான்சைச் சேர்ந்த பெண் பயங்கரவாதி ஒருவருக்கு ஈராக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சைச் சேர்ந்த Jamila என்ற பெண் ரேப் பாடகர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அதன் பின் அவர் துருக்கி வந்த போது தான், அவர் திருமணம் செய்த நபர் ஒரு பயங்கரவாதி என்று தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஈராக்கில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் மூத்த மகன் இறந்தார்.

இந்நிலையில் தான் அவருக்கு ஈராக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து Jamila பிரான்சில் இருக்கும் தன்னுடைய தாயாருக்கு எழுதிய கடிதத்தில், தாம் ஒரு சூழ்நிலைக் கைதி எனவு நான் எனது கணவரை திருமணம் செய்யும் போது அவர் ஒரு சொல்லிசை பாடகராக இருந்தார்.

அதன் பின் நாங்கள் துருக்கி வந்த பின்னரே அவரைப் பற்றிய தகவல்கள் தெரியவந்தது. நான் ஒரு நிரபராதி என்று குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி, தான் பிரான்ஸ் சிறையிப் இருக்க தயார் எனவும், என்னை பிரான்சுக்கு மீட்டுச் செல்லுங்கள் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் அரசாங்கம் எனக்கு ஒரு முறை மட்டும் கரிசனை காட்டுங்கள், நான் பிரான்சில் இயல்பு வாழ்க்கை வாழ விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.