Header Ads



மீண்டும் அரசியல் புரட்சி ஏற்படமுடியும் - ஜனாதிபதிக்கு புதிய பிரதமரை நியமிக்கவும் முடியும்

மீண்டும் அரசியல் புரட்சியொன்று மேற்கொள்ளப்படவுள்ளதா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 15ஆம் திகதி அரசியல் புரட்சியொன்று இடம்பெற போவதாக தகவல் கசிந்திருந்தன. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடமொன்றிடம் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

அரசியல் புரட்சியொன்றை மேற்கொள்ள முடியும். எனினும் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

எனினும் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாமல் அரசியல் புரட்சி மேற்கொள்வதில் எந்தவித பயனும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதிக்கு புதிதாக பிரதமர் ஒருவரை இப்போதும் நியமிக்கும் அதிகாரம் உண்டு எனவும், இதன் பின் நாடாளுமன்றில் பெரும்பான்மை நியமிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.