April 01, 2019

ஹெல்மட் குறித்து பள்ளிவாசல்களில் உலமாக்கள் பேசுவதில்லையா...? சத்துரவிற்கு வந்த சந்தேகம்

நீங்கள் நீதியை பற்றி பேசுகின்றீர்கள்,  நாட்டின் பொதுச்சட்டத்திற்கு கட்டுப்படுவதாக கூறுகின்றீர்கள். அப்படியென்றால் வெள்ளிக்கிழமைகளில் உங்களது ஜும்ஆ பள்ளிவாயல்களுக்கு அருகில் நின்று பார்த்தால் எத்தனை பேர் ஹெல்மட் அணியாமல் வருகிறார்கள் என்று தெரியும்.
கிலோ மீட்டர் கணக்கில் அவர்கள் அவ்வாறு பயணம் செய்கிறார்கள். இது நாட்டின் பொதுச்சட்டத்தை மீறுவதாகாதா?

உண்மை, நான் மனச்சாட்சியோடு உங்களது கருத்துடன் முற்றாக உடன்படுகிறேன்.
இந்த நாட்டில் சிறுபான்மையினராக வாழுகிற நாங்கள் கட்டாயம் நாட்டின் பொது நீதிக்கு கட்டுப்பட வேண்டும்.
பொது நீதியோடு இஸ்லாமிய சட்டமும் இந்த இடங்களில் உடன்படுகிறது.
யுத்தத்திற்கு செல்பவர் அதற்குரிய ஆயத்தங்களோடு செல்லவேண்டும் இல்லாவிட்டால் அது ஹராம்.
கற்பிக்கச்செல்பவர் அதற்குரிய ஆயத்தங்களோடு செல்லவேண்டும் இல்லாவிட்டால் அதுவும் ஹராம்.
வெள்ளிக்கிழமைகளில் குறித்த அந்த ஒரு மணி நேரத்தில் அதிகம் பேர் ஒன்று கூடுகிறார்கள். இதனால் பல நெருக்கடிகள் ஏற்படுவது உண்மை.
எனது ஊரிலும் இந்த பிரச்சினை இருக்கிறது.
ஆனால் நான் சொல்லியிருக்கிறேன் வெள்ளிக்கிழமை ஜும்ஆ என்பது நமக்கு மாத்திரமே, வைத்தியசாலைக்கு அவசரமாக செல்ல வேண்டிய ஒருவரின் பத்து நிமிடம் நமது முழு விடயங்களையும் விட பெறுமதியானது.
சதுர மஹத்மயா இதற்கென்று நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது அதனை நூறுவீதம் அமுல்படுத்த வேண்டும்.
( சதுர இடை மறிக்கிறார்...)
அப்படி பொலிஸார் சென்று சட்டத்தை அமுல்படுத்த முனையும் போது பாரிய பிரச்சினைகள் வரலாம், பள்ளிக்கு அருகே மெளலவிமாருடன் விரைவாக முஸ்லிம் மக்கள் ஒன்று கூடி எமக்கு மார்க்க கடமையினை நிறைவேற்ற உரிமையில்லையா போன்ற கோசங்களுடன் வருகிறார்களே? ஒன்றாகி எதிர்ப்பினைத்தெரிவிக்கின்றார்களே?
அவர்கள் ஒன்று கூடுகின்றார்கள் என்பதற்காக நாட்டின் சட்டத்தை நீதியை அமுல்படுத்தாமல் இருக்க முடியுமா? மெளலவி என்றாலும் தலைவர்கள் என்றாலும் யாராக இருந்தாலும் நாட்டின் நீதி என்பது எல்லோருக்கும் சமானமானதே. இதற்காக நீதியை பின்தள்ளிவிட முடியாது.
இன்னொன்று சதுர மஹத்மயா, இது முஸ்லிம் பள்ளிகளில் மாத்திரமல்ல, வெசக்கின் போது தைப்பொங்கலின் போது கூட ஏற்படலாம் ஆனால் பள்ளிவாயல்களில் கூடுதலாக இடம்பெறுவது உண்மை. எங்கு சட்டம் மீறப்பட்டாலும் நீதியை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன், மிக்க நன்றி ஆனாலும் வேலையில்லையே இதனைப்பற்றி உங்களது சிரேஷ்ட உலமாக்கள் அல்லது மெளலவிமார்கள் இது பாதுகாப்புக்காக அணியப்படுவது என்றாவது பள்ளிகளில் பேசுவதில்லையா?
அப்படி பேசுவதில்லை என்று சொல்லமுடியாது.
தலைமைத்துவங்களில் பிரச்சினைகள் இருக்கின்றன. அது எல்லா இடங்களிலும் இருக்கின்றன.
இன்று பெளத்தர்களின் தலைமை யார் என்று ஐந்து நிமிடங்கள் யோசித்துப்பாருங்கள்.
எங்களுக்கும் அப்படித்தான்.
நாங்கள் ஜம்இய்யதுல் உலமா சபை என்ற அமைப்பில் மார்க்க விடயங்களுக்கு தலைமை தாங்குகின்றோம், இதனை தாண்டி வெளியே அரசியல், பொருளாதார விடயங்களில் எமக்கு தலைமைத்துவத்தினை வழங்குவது கஷ்டம். 
இந்த நிலையில் ஒருவர் இந்த சட்டங்களுக்கு கட்டுப்படத்தவறினால் அதனை பொலிஸுடன் சம்பந்தப்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எங்களது ஊரைப்பொறுத்த வரையில் ஜும்ஆ தினத்திலேயே எமது பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியை பள்ளிக்குள் அழைத்து சட்டம் ஒழுங்கு தொடர்பில் சொல்லவேண்டியதை சொல்வதற்கு வழியமைத்து வைத்திருக்கிறோம்.
இப்படிச்செய்ய வேண்டும், செய்ய முடியும்.

Mujeeb Ibrahim

2 கருத்துரைகள்:

Masha Allah
ஏனைய காணொளிகளையும் கட்டாயம் மொழிபெயர்க்கவும்

This is wrong translation,

indru bowtharhalin thalaimai yaar endru 5 nimidangal yosithu paarungal

correct translation is ;

indru bowtharhalin thalaivar yaar endru kettaal, neengal kuda oru 5 nimidangal yoshippeenga....

Post a Comment