Header Ads



இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடைய அரசியல்வாதிகளுடன், கூட்டணியமைத்து ஆட்சியமைக்க மாட்டோம் - மகிந்த அணி பிரகடனம்

இஸ்லாம் அடிப்படைவாத கொள்கையுடைய அரசியல்வாதிகளுடன்   கூட்டணியமைத்து ஒருபோதும் ஆட்சியினை அமைக்க மாட்டோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, அடிப்படைவாத கொள்கையுடையவர்கள் சட்டத்தின் ஊடாக  தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று -29- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத அமைப்புக்களுடனும், அடிப்படைவாத  செயற்பாடுகளுடனும்  தொடர்புடையதாக  பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதின்,  முஜ்புர் ரஹ்மான்  மற்றும்  மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் கடந்த காலங்களில் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டார்கள். இவர்களுக்கு  எதிராக  நடவடிக்கை மேற்கொண்டால்  அரசாங்கம்  பலவீனமடையும் என்று   எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் இந்த   நிலைப்பாடு  இன்று  பாரிய  அழிவினை  ஏற்படுத்தியுள்ளது.  தற்போது  குண்டு  தாக்குதலுடன் கைது செய்யப்பட்டவர்கள் இவர்களுடன்  தொடர்புடையவர்கள் என்று குற்றச்சாட்டப்படுகின்ற  நிலையிலும் அரசாங்கம் எவ்வித   விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

(இராஜதுரை  ஹஷான்)

No comments

Powered by Blogger.