Header Ads



இலங்கை முஸ்லிம்கள் தமது வாழ்நாளில், மறக்கமுடியாதபடி மகிந்த செய்த மாபெரும் உதவி

சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் ஆற்றிய ஓர் முக்கியமான உரையின் ஒரு சிறு பகுதியை கேட்க கிடைத்தது..

மாவில்லாறு வாய்க்கால்… உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கின்றது என்பது தெரியவில்லை

கிழக்கு வாழ் முஸ்லிம்களின் ஒரு கேந்திரஸ்தானமான மூதூர் கிராமத்துக்கு மிக அண்டையில் இருக்கும் ஒரு பிரதானமான வாய்க்காலே அது. கிழக்குப் பிரதேச மக்களின்  அன்றாட விவசாய நிலங்கள் மற்றும்  தண்ணீர் பிரச்சினைகளை தீர்த்து வைத்துக்கொண்டிருந்த ஓர் முக்கியமான வாய்க்காலாக திகழ்ந்தது  மாவில்லாறு வாய்க்கால்...

இந்த  மாவில் ஆறு வாய்க்கால் 21 ஜூலை 2006 அன்று உலகத்தில் 32 நாடுகளால் தீவிரவாதிகள் என அடையாளமப்படுத்தப்பட்ட  தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கைப்பற்றப்பட்டு மூடப்பட்டது.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், முக்கியமாக தொடர்ந்தும் 4 வருடங்களாக நீடித்து வந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தம் அமுலில் இருந்து கொண்டிருந்த நிலையில் புலிகளால் மாவிலாறு வாய்க்கால் கைப்பற்றப்பட்டு கிட்டத்தட்ட கிழக்கு மாகாணத்தில் வாழும் 15000 குடும்பங்களின் விவசாய நிலங்களை பாழடையச் செய்தது மட்டுமல்லாமல் மூதூர் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த எமது உறவுகள் அனைவரையும் வடக்கிலிருந்து எவ்வாறு முஸ்லிம்கள் புலிகளாள் வெளியேற்றப்பட்டார்களோ அதேபோல் மூதூர் கிராமத்தில் இருந்தும் முஸ்லிம்கள் அனைவரும் கால்நடையாக இரவோடு இரவாக விரட்டப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் கிராமத்துக்குள் புகுந்து நடாத்திய தாக்குதலினாள் பலர் காயமுற்று ஷஹீதாக்கவும் பட்டார்கள். இன்னா வில்லாதி வ இன்னா இலைஹி ராஜி ஊன்...

இந்நிலைமையில் எமது முஸ்லிம் தலைமைகள் மற்றும் ஜம்மியத்துல் உலமா முன்நின்று அன்று நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் முஸ்லிம்களின் அவல நிலையை எடுத்துரைத்து அதற்கான தீர்வைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க யுத்த நிறுத்தம் ஒன்று அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில்  சர்வதேசத்தினது, அதிலும் முக்கியமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இவைகளின் பாரிய அழுத்தங்கள் எமது நாட்டின் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் ஊடாக புலிகளின் புத்தியினால் சிறிய வாக்கு வித்தியாசத்தில்  அரியாசனம் ஏறிய ஜனாதிபதியாக இருந்த ராஜபக்ஷவுக்கு நடவடிக்கை எடுப்பது பெரும் சவாலாயிற்று...

ஆனால் அல்ஹம்துலில்லாஹ்...இவைகல் எவற்றையும் பொருட்படுத்தாது துணிவுடன் தைரியமாக செயற்பட்டு உறுதியான முடிவை  எடுத்து அதை உடனடியாக அமுல் நடத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, உலகில் முதலாம் தர தீவிரவாத அமைப்பாக அக்காலகட்டத்தில் இனம் காணப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மாவில்லாறு மற்றும் மூதூர் பிரதேசத்தை 24 மணித்தியாலத்துக்குள்  இலங்கை இராணுவத்தின் அபாரமான பதில் தாக்குதலின் ஊடாக கைப்பற்றி மீண்டும் எமது முஸ்லிம் உறவுகளை தமது சொந்த நிலங்களில் குடியேற்றியது எமது சமூகத்துக்கு மத்தியில்  மறக்கடிக்கப்பட்ட  அரசியல் வரலாற்றின் ஓர் மறுமுகம் ஆகும்...

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளினால் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக 30 வருட கால யுத்த சூழ்நிலையில் கட்டவிழ்க்கப்பட்ட தாக்குதல்களுக்கு முதலாவதாக புலிகளுக்கு எதிரான தாக்குதலை உடனடியாக மேற்கொண்டு முஸ்லிம் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுத்த முதலாவதும் இருதியானதுமான ஜனாதிபதியாக இலங்கை வரலாற்றில் இடம் பிடித்தவர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆவார்...

சந்திரிக்கா, பிரேமதாச, ஜே ஆர் இவர்களின் காலப்பகுதியில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் வடகிழக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் எந்தவிதமான பதில் தாக்குதல்களோ நியாயமோ கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கியமாக ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் அதுவும் குறிப்பாக ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சி காலத்தில் வேரூன்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் அவ்வப்போது முஸ்லிம் சமூகத்தை தீண்டிக் கொண்டிருக்கும் நிலை காணப்பட்டாலும் அன்று இருந்த அரசாங்கங்கள் முஸ்லிம் தரப்பினர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து அவர்களை புலிகளுக்கு எதிராக தமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொண்டதே தவிர தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கை இராணுவத்தை கொண்டு மேற்கொள்ளவில்லை மாறாக அரசாங்கம் திரைக்குப் பின்னிருந்து முஸ்லிம்களை புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வைப்பதற்கான சில காய் நகர்த்தல்களையே செய்து கொண்டிருந்தது...

இந்த மாவில்லாறு பிரச்சினையின் பொழுது அடிபட்டு அகதியாக வந்த முஸ்லிம் மக்கள் கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலைமையில் சின்னஞ்சிறு பிஞ்சு களுடன் அவலத்தை சுமந்துகொண்டு அகதிகளாக வந்த எமது உறவுகளுக்கு நிவாரணங்கள் உடனடியாக சேகரித்துக்கொண்டு அவர்களின் துயர் துடைப்பதற்காக அவர்களை பார்வையிடச் செல்வதற்கான ஒரு வாய்ப்பும் எனக்கும் எமது Care & Share organisation அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்களுக்கும் எமது தெஹிஅங்கை கிராமத்தைச் சார்ந்த சில சமூக நலன் விரும்பிகளுக்கும் கிடைத்தது. எம்மைப் போல் நான்கு திசைகளிலும் இருந்து அவர்களுக்கு கை கொடுக்க வந்த எமது உறவுகளுள் எவரும் அவர்களின் பரிதாபத்தை கண்டு கண் கலங்காமல் இருக்க வில்லை..

ஓர் அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கடமையில் இருப்பவர் நிச்சயமாக இன மத மொழிகளுக்கு அப்பால் மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தை முன்வைத்து நீதியாகவும் நேர்மையாகவும் துணிச்சலாகவும் உடனடியாகவும் தமது நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு கருதியே முடிவுகளை எடுப்பது கடமையாகும்.

அன்று எமது நாட்டின் தலைமைத்துவத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது கடமையினை தமக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரங்களை பிரயோகித்து  சர்வதேசத்தினாலும் தேசிய மட்டத்தினாலும் வரக்கூடிய அனைத்து சவால்களையும் அழுத்தங்களையும் பொருட்படுத்தாது 26ம் திகதி ஜுலை 2006 அன்று நீதியானதும் நிவர்த்தியானதும் முடிவினை துணிவுடன் எடுத்ததின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தக்க பாடத்தை கற்பித்து நிறைவேற்று அதிகாரம் என்ற சொற்பதத்திற்கான வரைவிலக்கணத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்டினார்... 

நான் மேலே குறிப்பிடப்பட்ட விடயத்தை இங்கு சுட்டிக் காட்டுவதற்காக முக்கியமான நோக்கம் என்னவென்றால் 2002 ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் சர்வதேசத்தின் முன்னாள் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பொழுதே இதே மூதூர் பிரதேசத்தில் எமது முஸ்லிம் வாலிபர்கள் சிலர்  இராணுவ பாதுகாப்பு முகாமுக்கு முன்னால் வைத்து அங்கு கடமை புரிந்த இராணுவ அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பட்டப்பகலில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொடூரமாக தாக்கப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள்..

ஆனால் அந்த அரசாங்கத்துடன் இணைந்து இருந்த எமது முஸ்லிம் தலைமைகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இச்சம்பவத்தை கண்டித்து எமது மூதூர் முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுத் தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கெஞ்சிக் கேட்ட போதும் அந்தப் பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வேண்டி இராணுவத்துக்கு எந்தவிதமான கட்டளைகளையும் அரசாங்கத்தினால் பிறப்பிக்கவில்லை. மூதூர் மக்கள் வீதியில் இறங்கி நீதி கோரி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட பொழுதும் கூட ரணில் விக்ரமசிங்க அவர்கள் நுவரெலியாவில் தனது சகாக்களுடன் உல்லாசமாக விடுமுறையை கழித்து கொண்டிருந்தாரே தவிர அம்மக்களின் அவலங்களை கேட்பதற்காக வேண்டியாவது மூதூர் மண்ணை மிதிக்கவில்லை..

ஆனால் அதே சர்வதேசத்தின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்ட அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் காலகட்டத்திலேயே வெறுமனே நான்கு நாட்களுக்குள் இராணுவ தளபதியை சிங்கப்பூரிலிருந்து வரவழைத்து வெறுமனே இரண்டு மணித்தியாலத்துக்குள் ஆலோசனைகளை செய்து துணிச்சலான முடிவினை எடுத்து 24 மணித்தியாலத்துக்குள் தீவிரவாத்துக்கு தக்க பதில் அளித்து  மக்களுக்கு வாழ்வதற்கான தமது பிறப்பிடத்தையும் தமது விவசாயத்துக்கான தண்ணீரையும் பெற்றுக்கொடுத்து, அதைத் தொடர்ந்து வெறுமனே 30 மாதத்திற்குள் 30 வருடங்களாக வேரூன்றி இருந்த அசைக்க முடியாத தீவிரவாதத்தை பூண்டோடு அளித்து தம்மை வரலாற்றில் பதித்து கொண்டவரே  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

வசீர் முக்தார்.
கண்டி.

11 comments:

  1. There is no dispute in the leadership he has given to win the war, his failure started when he stepped away from stopping those who around him from corruption & instigating hatred etc

    ReplyDelete
  2. மிகச் சரியான உண்மை.ஆனால் mr.janesara க்கும் இன்னும் சிலருக்கும் புலிகளின் கையாட்கல் காசை அள்ளி கொடுத்து Muslim சமூகத்துக்கு எதிராக திட்டம் தீட்டீனார்கல்.இதில் mr.janasara and some politicians சேர்ந்து கோத்தபாயாவை மடக்கிவிட்டார்கல்.ஆனால் மஹிந்த இந்த கூட்டணியை விரும்ப வில்லை.ஆனாலும் தம்பியை தட்டிக்கேட்காமல் விட்டதுதான் அவர் செய்த தவரூ.ஆனால் இப்போது மஹிந்த,கோத்தா இருவரும் உன்மையை அறிந்து கொண்டுவிட்ட்னர். கோத்தா தான் ஜானசாரவினால் முட்டாலாக்கப்பட்டதை இப்போது உணர்ந்தவிட்டார்.ஆனால் பசில் ராஜபக்ச எவ்வலவோ எடுத்து சொல்லியும் ஜானசாராவை பற்றி கோத்தா நம்பவில்லை.இருதியில் மஹிந்தவுக்கு மிகப் பெரும் தோல்வி ஏற்பட்டது.இப்போது அந்த புலிகல் செய்த சதியை,ஜானசாராவின் பணத்துக்கன நடிப்பை உணர்ந்துவிட்டனர்.

    ReplyDelete
  3. May Be True, May Not True...

    BUT why this article come at this time ?

    Also remember the FREE permission given to BBS during the MR Time. How can you justify this ...

    All politics.

    ReplyDelete
  4. கட்டுரையை நுணுக்கமாகப் படிக்கும்போது ஓர் உண்மை தெளிவாகத்தெரிகிறது. ராஜபக்சவின் அரசியல் நகர்வுக்கு இந்த கட்டுரையாளர் பாலும் பன்னீரும் வார்ப்பவர்போல் தெரிகிறது. யுத்த காலங்களிலும் யுத்த த்தின் பின்னரும் கிழக்கிலும் வடக்கிலும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் குறிப்பாக வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களைக்குடியேற்றுவது தொடர்பாக எவ்வளவு காலமாக அவர்களின் விடுக்கும் கோரிக்கைளும் வேண்டுகோள்களும் எப்போதாவது ராஜபக்சவின் காதில் எட்டியதா? அந்த விடயங்களில் இராப்பகலாக பாடுபட்ட சகோதர ர்களின் ஆதங்களைநேரில்கேட்டால்தான் தெரியும் அவர்களின் உண்மை நிலைப்பாட்டையும் அவர்களின் அவலங்களையும் . இப்போதுதேர்தல்கள் நெருங்குவதால் கட்சிகளுக்கு வக்காளத்து வாங்க சோனகர்கள் தயார்படுத்தப்படுகின்றனர் என்ற உண்மைதான் இந்த கட்டுரையிலிருந்து தெளிவாகின்றது.

    ReplyDelete
  5. Waseem mukthar ....please go to hell. There are a lot to speak during that regime. Millitary regime. Please politicalisation of a individual is so shame . Bcoz we are as readers , we read more articles than u write.

    ReplyDelete
  6. While "THE MUSLIM VOICE:" fully agrees to the comments made bu Brothers Mfaz, Rizad, Mohamed and Professional Translation Services, "THE MUSLIM VOICE" cannot "AGREE" to the statement:
    Quote: இந்நிலைமையில் எமது முஸ்லிம் தலைமைகள் மற்றும் ஜம்மியத்துல் உலமா முன்நின்று அன்று நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் முஸ்லிம்களின் அவல நிலையை எடுத்துரைத்து அதற்கான தீர்வைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க ..... Unquote.
    written by the writer வசீர் முக்தார், கண்டி (Varreez Muthar).
    The decission to FREE Maavilaru anicutwas a military and humanitarian decision and was taken by Gotabaya Rajapaksa in just 3 (Three) minutes after Gotabaya Rajapaksa, Mahinda Rajapaksa nad the Security council was briefed by the Army of the situation of the need for water to the people of the district, specially - DRINKING" water. NON OF THE MUSLIM POLITICIANS OR THE ALL CEYLON JAMIYATHUL ULEMA WERE RESPONSIBLE FOR THIS GREAT FAVOUR MAHINDA AND GOTABAYA RAJAPAKSA DID TO THE PEOPLE OF MUTUR?THOPPUR AREA. IT WAS INDEED A BLESSING OF GOD ALLMIGHTY ALLAH, Alhamdulillah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice", Former SLFP District Organizer, Trimcomalee District and SLFP/SLPP Stalwart.

    ReplyDelete
  7. தம்பிமாரே நான் யாருக்கும் சார்பானவன் அல்ல.மஹிந்த சரியில்லை,எமக்கு ஒன்ருமே செய்யவில்லை என வைத்துக்கொல்வோம்.சரி நல்லாட்சியில் எதை உங்களக்கு வழ்ங்கியது.எமது சமூகம் மிக அதிகமான வன்முறைகலையும்,கலவர்ங்கலையும் கண்டது இப்பேதய ஆட்சியில்தான்.அதுமட்டுமில்ல நீங்க என்ன நினைக்கிறீர்கள் ஜானசார தண்டனை அனுபவிப்பது நல்லட்சியின் நடவடிக்கை என நினகின்ரீர்கலா.நீதிமன்ரத்தையும்,சந்தியா அவர்களயும் அவமதித்த குற்றத்துக்காக.எனவே எமக்கு இரு கட்சியினாலும் விமோசனம் இல்லை.ஆனால் இப்போது இந்த ஆட்சியில் வட,கிழக்கு பகுதியில் புலிகளின் ஆதரவாலர்கலின் Muslim எதிர்பை சகித்துக்கொல்ல முடியவில்லை.

    ReplyDelete
  8. நீங்கள் மஹிந்த உடன் உள்ள கோபத்துக்காக நிராயுதபானிகலான Muslim கலுக்கு புலி கோழைகல் செய்த கொடுமையை நிராகரிக்க வேண்டாம்.ஆனால்,if we think deeply then,we can say,now situations so possible to LTTE,that’s they create north and east area everything against Muslim community

    ReplyDelete
  9. மாவிலாறுதொடர்ந்து உருவான மூதூர் பிரச்சினைகள் தொடர்பாக நான் அறிந்த விடயங்கள் அதிற்ச்சி தருபவை. மூதூரில் ராணுவத்தை பின்வாங்க செய்து புலிகளை நுழையவிட்டு முஸ்லிம் அடிபடைவாத அமைப்புகள் சிலவற்றை அழிப்பதும் பின் மூதூரை மீழ கைபற்றுவதும் என்கிற இராணுவ செயல்பாடு சர்வதேச ஆதரவுடனான கோத்த பாய ராஜபக்சவின் முஸ்லிம் களுக்கு எதிரான சதி என ஒரு தகவல் என்னை அதிற்ச்சி அடைய வைத்தது. அப்போது இராணுவத்தை விரட்டி மூதூரைக் கைபற்றுவதற்கான பலம் புலிகளுக்கு இருக்கவில்லை.

    ReplyDelete
  10. what is the meening of munasirta????

    ReplyDelete

Powered by Blogger.