Header Ads



பயங்கரவாதத் தாக்குதல், இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்பட்டதல்ல - பேராயர் மெல்கம் ரஞ்சித்

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழித்து நாட்டில் அமைதியும் சுதந்திரமுமிக்க சூழலை விரைவில் ஏற்படுத்தும் பொறுப்பினை அரச தலைவர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வமத ஒன்றுகூடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கொடூர பயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இச்செயற்பாடுகளில் நாட்டின் பாதுகாப்பு துறையினர் மீது தான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் எந்த வகையிலும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்குள் கொண்டுவர தான் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

எதிர்பாராத இந்த சந்தர்ப்பத்தில் மக்களிடையே அமைதியின்மை ஏற்பட இடமளிக்காது பொதுமக்கள் மத்தியில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் பொறுப்பினை நிறைவேற்ற நாட்டின் அனைத்து மதத் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

நாட்டில் நிகழ்ந்த துன்பியல் சம்பவத்தையடுத்து பேராயர் மெல்கம் காடினல் ரஞ்சித் உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும் கிறிஸ்தவ மக்களும் செயற்பட்ட அமைதியான முறையினை பாராட்டிய ஜனாதிபதி, அந்தவகையில் அவர்கள் நாட்டிற்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகின்றனர் எனத் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சமான சூழலை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் மத்தியில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள் விரிவாக கலந்துரையாடியதோடு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இதன்போது முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த பேராயர் மெல்கம் காடினல் ரஞ்சித், 

இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒருபோதும் இஸ்லாமிய மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல என்பதோடு பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றனர் என்றும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்காக நாட்டின் புலனாய்வு துறையை மேலும் பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இதன்போது சுட்டிக்காட்டிய பேராயர் அவர்கள், கடந்த சில வருடங்களுக்குள் இடம்பெற்ற சர்வதேச ஊடுருவல்கள் நாட்டின் புலனாய்வு துறையினரை செயலிழக்க செய்ய ஏதுவாகியுள்ளதாக தெரிவித்தார்.

4 comments:

  1. மதிப்புக்குரிய பேராயரின் கருத்து மிகச் சரியானது.ஆனால் ஒரு சில தமிழ் விபச்சார ஊடகங்களும்,சில முன்னால் பயங்கரவாதிகலும் எங்கள் மீது ஒரு ஊடகப் போரை நடத்துகின்ரார்கல்.ஆனால் அவர்கள் நினத்தது மீண்டும் எம் மீது ஒரு 83 July கலவரம் தினிக்கப்படும் என.ஆனால் பெரும்பான்மையின மக்களுக்கு நன்ராகவே தெரியும் Muslim மக்கள் தீவீரவாதிகல் அல்ல என.sri Lanka muslim மக்களும் Muslim நாடுகளும் 33 வருட கால பயங்கரவாதத்தை ஒழிப்பதக்கு வழங்கிய ஒத்துழைப்பை அவர்கள் இன்னும் மறக்க வில்லை.சிலரின் மீண்டும் 83 கனவு பகல் கனவு ஆகிவிட்டது.

    ReplyDelete
  2. ஜனாதிபதி அவர்களே இலங்கை முஸ்லிம்களை வம்புக்கு இழுத்து அவர்களின் உயிர்களை கொண்டார்கள் உடைமைகளை சேதப்படுத்தினார்கள் பள்ளிவாசலில் வணக்கம் செய்துகொண்டிருக்கும்போது உள்நுழந்து கொண்டார்கள் தங்களின் வீடுகளைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள் பள்ளிகளை எரித்தார்கள் இவ்வாறு நமது நாட்டில் வாழ்ந்த வாழும் சில பயங்கரவாதிகளால் கொடூரங்கள் செய்யப்பட்டன அப்போதுகூட முஸ்லிம்கள் பொருமையாக வாழ்ந்து நாட்டை காப்பாற்றிய உண்மைகளை நீங்கள் கட்டாயம் இங்கு கூறியிருக்கவேண்டும் உண்மையான முஸ்லிம்கள் அல்லாஹுவை பயந்து வன்முறையை ஒரு போதும் விரும்பாதவர்கள் என்பதை தெரிந்துகொள்ளவும்!

    ReplyDelete
  3. Islamiya mathara theevira watham uruwawethatkana karanangalum ariyappada wendrum. Oru theewirawatham uruwahum pothu athatku ethiraha innum theewirawathamkal uruwawethu iyalphu enpathaiyum karuththil kolla wendrum

    ReplyDelete
  4. We salute rev malkam rajith your conduct in this hour of difficulty is exemplary other religions leaders have lot learn from you

    ReplyDelete

Powered by Blogger.