Header Ads



புர்கா தடை,, சமயத் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள்


நாட்டில் பயங்­க­ர­வாத நிலை­மை­யொன்று தோற்­று­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணி­வ­தற்கு கடும் எதிர்ப்பு உரு­வா­கி­யுள்­ளது.

இது குறித்து சமயத் தலை­வர்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.

உயிர்த்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற தொடர் குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்கள் தொடர்பில் மத­ரீ­தி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­டக்­கூ­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு ஞாயிற்­றுக்­கி­ழமை அனைத்து மதத் தலை­வர்­களின் பங்­கு­பற்­ற­லுடன் இடம்­பெற்­றது.

கொழும்பு பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­விக்­கையில்,

புர்கா அணி­வது இஸ்லாம் மதத்தில் குறிப்­பி­டப்­­பட்­டி­ருக்­கு­மாக இருந்தால் அந்த மதத்தை பின்­பற்­று­ப­வர்கள் அதனை ஆத­ரிப்­பது சாதா­ரண விட­ய­மாகும். ஆனால் தமது மதத்தில் கூறப்­பட்­டுள்ள ஒரு­வி­டயம் ஏனைய மதத்தை பின்­பற்­று­ப­வர்­களின் தலையைக் கொய்­வதைப் போன்று இருந்தால் அது­பற்றி அவர்கள் சிந்­திக்க வேண்டும் என்றார்.

அனைத்து மத சம்­மே­ளன தலைவர் இத்­தே­பானே தம்­மா­லங்­கார தேரர் தெரி­விக்­கையில்,

புர்­காவை தடை செய்­யு­மாறு முன்­வைக்­கப்­பட்ட யோச­னைக்கு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பிர­தா­ன­மான இருவர் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ள­தாக சில தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. எவ்­வா­றி­ருப்­பினும் நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள இந்த ஸ்திர­மற்ற நிலை­மையை கூடிய விரைவில் சரி­செய்­வ­தற்கு அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும். நாடு மீண்டும் அழிவை நோக்கி பய­ணிப்­ப­தற்கு இட­ம­னிக்­காமல் எம்மில் மாற்றம் ஏற்­பட வேண்டும்.

அ.இ.ஐ. உலமா சபையின் ஊடக செய­லாளர் பாஸில் பாரூக் தெரி­விக்­கையில்,

நீண்­ட­கா­ல­மாக புர்கா அணிந்­துள்ள பெண்கள் அதனை நீக்கிக் கொள்­வ­தற்கு விரும்­பா­விட்டால் அவர்கள் தாராளமாக வீட்டிலேயே இருந்து கொள்ள முடியும். அதே வேளை வெளியிடங்களுக்கு செல்பவர்கள் நிச்சயமாக முகத்தை மறைக்காமல் செல்ல வேண்டியது அவசியமாகும் என்றார்.
-Vidivelli

2 comments:

  1. பெண்கள் தாராளமாக வீட்டில் இருந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டால் அவருடைய அத்தியாவசியத் தேவைகளான வங்கிகளுக்கு செல்லுதல், ஆண்கள் இல்லாத வீடுகளில் பெண்கள் பாடசாலை, பள்ளி கூட்டங்களுக்குப் போக வேண்டிய தேவை உள்ளது, இவ்வாறானவர்கள் எந்த நிலைமையை கையாள்வது?

    ReplyDelete
  2. உண்மைதான் இதற்கு சிறந்த ஒரு முடிவு வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.