Header Ads



அம்­பாறை பள்ளிவாசலுக்கு நஷ்­ட­ஈடு இல்லை - முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் பலதடவை கோரியும் பயனில்லை

2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் இறு­தியில் இடம்­பெற்ற அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் மற்றும் தனியார் சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு மதிப்­பீடு செய்­யப்­பட்­டதை விடவும் மிகக் குறை­வாக வழங்­கப்­படு வதற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளதால் பள்­ளி­வா­சலும் பாதிக்­கப்­பட்ட சொத்­து­களின் உரி­மை­யா­ளர்­களும் மிகக்­கு­றைந்த நஷ்­ட­ஈட்­டினைப் பெற்றுக் கொள்­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்­துள்­ளனர்.

மதிப்­பீட்டுத் திணைக்­களம் மற்றும் அரச நிறு­வ­னங்கள் என்­ப­வற்றால் மதிப்­பீடு செய்­யப்­பட்ட நஷ்­ட­ஈடே வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென அவர்கள் புனர்­வாழ்வு அதி­கார சபையைக் கோரி­யுள்­ளார்கள். அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட சேதம் 27 மில்­லியன் ரூபா என அரச நிறு­வ­னங்­களால் மதிப்­பீட்டு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அதற்கும் குறை­வான நஷ்­ட­ஈட்­டினைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் தயா­ராக இல்லை என அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்ட கால­எல்­லையில் நிர்­வாக சபைத் தலை­வ­ராக இருந்த ஏ.எல்.ஆர். ஹாரூன் தெரி­வித்­துள்ளார்.

அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு நஷ்­ட­ஈ­டாக 27 மில்­லியன் ரூபாவும் மற்றும் 13 சொத்­து­க­ளுக்கு 3.6 மில்­லியன் ரூபாவும் வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் மதிப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த நஷ்­ஈட்டுத் தொகை­யினை வழங்­கு­வ­தற்­காக அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு முன்னாள் அமைச்சர் டி.எம். சுவா­மி­நா­த­னினால் அமைச்­ச­ர­வைப்­பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. ஆனால் அமைச்­ச­ரவை புனர்­வாழ்வு அதி­கார சபையின் நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான சுற்று நிரு­பத்தின் அடிப்­ப­டை­யி­லேயே வழங்­கு­மாறு தீர்­மானம் மேற்­கொண்­டது.

புனர்­வாழ்வு அதி­கார சபையின் சுற்று நிரு­பத்­துக்கு அமைய ஒரு சொத்­துக்கு ஒரு மில்­லியன் ரூபா­வுக்கு மேல் நஷ்­ட­ஈடு வழங்­க­மு­டி­யாது. அதன் அடிப்­ப­டை­யி­லேயே அம்­பாறை பள்­ளி­வா­ச­லுக்கு சேதம் 27 மில்­லியன் என மதிப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்த போதும் ஒரு மில்­லி­யனே ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் 13 சொத்­து­க­ளுக்கு ஏற்­பட்ட சேதம் 3.6 மில்­லியன் என மதிப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் 6 இலட்சம் ரூபாவே வழங்க முடியும் எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என புனர்­வாழ்வு அதி­கார சபையின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் உரிய நஷ்­ட­ஈட்­டினைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அமைச்­ச­ரவைப் பத்­திரம் மீண்டும் தயா­ரிக்­கப்­பட்டு சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது எனவும் கூறினார்.

அம்­பாறை வன்­செ­யல்­க­ளுக்குப் பின்பு இடம்­பெற்ற கண்டி –திகன வன்­செ­யல்­க­ளுக்கு உரித்­தான நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் ஒரு­வ­ருட காலம் கடந்தும் அம்­பாறை வன்­செ­யல்­க­ளுக்­கான உரிய நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டா­துள்­ளமை குறித்து பாதிக்­கப்­பட்ட சொத்துகளின் உரிமையாளர்களும் பள்ளிவாசல் நிர்வாக சபையும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பலன் கிட்டவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். Vidivelli

1 comment:

Powered by Blogger.