Header Ads



ராஜித்தவின் உரையால் கோபத்தில் மைத்திரி - குண்டுவெடிப்பின் பின்னரும் ரணிலுடன் பலாய்

- Sivarajah-

தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டாலும் ஜனாதிபதி தரப்பும் பிரதமர் தரப்பும் தனித்தனியாக செயற்பட்டு வருவதாக தெரிகிறது.

நேற்றுக் காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன ,இந்த தாக்குதல்கள் குறித்து பாதுகாப்பமைச்சையும் பாதுகாப்புத் தரப்பினரையும் கடுமையாக விமர்சித்திருந்தார். வெளிநாட்டு உள்நாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரித்திருந்தும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத பாதுகாப்பு தரப்பு குறித்து அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதன் பின்னர் நேற்று மாலை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றனர்.அங்கு கூட்டம் ஒன்று நடைபெறவிருந்தது.ஆனால் அதில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்ரி மறுப்புத் தெரிவித்தார்.அமைச்சர் ராஜித்த ஆற்றிய உரையால் கடும் கோபத்தில் இருந்தார் மைத்ரி ..

பின்னர் அமைச்சர்கள் குழு ஒன்று அமைச்சர் ராஜித்தவுடன் ஜனாதிபதியின் அறைக்கு சென்று நிலைமைகளை கூறி அவரை பேச்சுக்கு அழைத்து வந்தது.பின்னர் பேசிய ஜனாதிபதி ,பாதுகாப்பு விடயங்களை பொதுவெளியில் அமைச்சர்கள் விமர்சிக்காமல் இருந்திருக்கலாமென தெரிவித்தார்.

அதேசமயம் நேற்றுக் காலை தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரி – பாதுகாப்பு குறைபாடு என்று கூறி ஐக்கிய தேசியக் கட்சி தன்மீது விமர்சனங்களை தொடுத்தால் தாமும் சில விடயங்களை பகிரங்கமாக சொல்ல வேண்டி வருமென தெரிவித்ததாக அறியமுடிந்தது.

பிரதமர் தனியே இராஜதந்திரிகளை சந்தித்ததும் ஜனாதிபதிக்கு பிடிக்கவில்லையென சொல்லப்படுகிறது.

இதேவேளை இன்று காலை நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டத்தை இறுதி நேரத்தில் ரத்துச் செய்தார் ஜனாதிபதி .

இப்போது அமைச்சர்கள் பிரதமர் ரணில் தலைமையில் விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

5 comments:

  1. "ஐக்கிய தேசிய கட்சி என்னைக் குறை கூறினால் நானும் சில விடயங்களை பகிரங்கமாக கூற வரவேண்டி வரும்" என்று ஜனாதிபதி சொல்லி இருப்பதை பார்த்தால் இவர்கள் எல்லோருமா சேர்ந்து பெரிதான எதையோ மூடி மறைக்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

    ReplyDelete
  2. ellarum sendu senja koothu idu kudu casela irundu makkala thisa thiruppa kudu case la periya thalaihal ellarum maatta warum du therinji senja sadi

    ReplyDelete
  3. ithatku uruvakiyavarkal rajitha,champika ranil

    ReplyDelete
  4. முதலில் இந்த புராதன கால்த்து கட்சியை மக்கள் புறக்கணித்து விட்டு நல்ல வேறு கட்சிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  5. இலங்கையில் உள்ள இரண்டு கட்சிகளிலும் அதிகம் திருடர்களே உள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.