Header Ads



மன்னார் மாவட்ட கூட்டுறவு பிரதிநிதிகள், இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவருடன் சந்திப்பு


மன்னார் மாவட்ட அனைத்து கூட்டுறவுச் சங்கத் தலைவர் பேர்னாட் பிரசன்னா தலைமையிலான குழுவினர் இலங்கை இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் முஹம்மது றியாஸுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று ( 2018-04-09)நடைப்பெற்றது. 

மன்னார் சங்கத்தின் தலைவர் பேர்னாட் பிரசன்னா கூறுகையில்,,

யுத்தத்தினாலும் , பூகோள ரீதியாகவும் மன்னார் மாவட்டத்தின் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் காணப்படுவதுடன் இளைஞர்களுக்கான தொழில் வசதி வாய்ப்பு  , விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் வாய்ப்புக்கான வழிகாட்டல் மற்றும் வசதி வாய்ப்பு குறைவாக உள்ளமையினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர். 

மன்னார் மாவட்டத்தில் மிக விரைவில் இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு கிளை ஸ்தாபிப்பதுடன் ,  இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பிற்கான கருத்தரங்கு , பயிற்சி நெறி மற்றும் தொழில் வாய்ப்பிற்கான உபகரணங்கங்களை இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சம்மேளனத்தின் ஊடாக ஆரம்பிப்பதுடன் ,  மன்னார் மாவட்ட அனைத்து கூட்டுறவுச் சங்கத்தின் குறைகளை கைத்தொழில் மற்றும் வர்த்தக , மீள்குடியேற்றம்  கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் கொண்டு சென்று உரிய தீர்வினைப்பெற்றுத் தருவதாக முஹம்மது றியாஸ் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.