Header Ads



நிகாப்பை சட்டத்தின் மூலம், தடைசெய்ய அனுமதிக்கக்கூடாது - ஐ.நா. தூதுவரிடம் முப்தி றிஸ்வி திட்டவட்டமாக தெரிவிப்பு


- AAM. Anzir -

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை  கருத்திற்கொண்டே முகம் மூடுவதை தவிர்க்குமாறு நாம் அறிவிறுத்தியுள்ளோம். எனினும் சட்டம் நிறைவேற்றி நிகாப்பையோ அல்லது புர்காவையோ தடைசெய்ய ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் முப்தி  றிஸ்வி தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் தூதுவர் (UN Under Secretary General Mr. Miguel Moratinos, UN Alliance of Civilizations)  உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த காலங்களிலும் யுத்தம் தீவிரமடைந்திருந்த காலத்திலும் கூட, மூகத்தை மூடுதல் அச்சுறுத்தலாக நோக்கப்படவில்லை. எமது சமூகம் தற்போது பாதுகாப்புக்கு மிகப்பெரும் ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அதுபோன்று எங்களது சமூகத்திற்கும் பாதுகாப்பு தேவையான காலகட்டத்தில் இருந்துகொண்டு நிற்கிறோம் எனவும முப்தி றிஸ்வி ஐ.நா. தூதுவரிடம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முகத்தை மூடுதல் குறித்து மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனினும் இதனை நிரந்த சட்டமாக்க அனுமதிக்கக்கூடாது. அமெரிக்கா உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான நாடுகளில் முகத்தை மூடுதல் தடை செய்யப்படாத நிலையில், ஜனநாயக நாடான இலங்கையிலும் அதற்கு நிரந்த தடையை விதிக்கக்கூடாது என்பதுடன் இதனை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற் கொள்ளவும் வேண்டும் எனவும் முப்தி றிஸ்வி வலியுறுத்தியுள்ளார்.

இதில் மௌலவிகளான முர்சித், பாசில் பாருக், ஜhவிட் யுசுப் ஆகியோரும் பங்கேற்றனர்.

பாதுகாப்பு கல்வி ஊடகம் சட்டம் ஆகிய துணை தலைப்புகளிலும் இந்த கலந்துரையாடல் நீடித்தது.





1 comment:

  1. Currently Main tourism has been run by Arabs. If it becomes a permanent rule.
    Tourism will get another hit no doubt.

    ReplyDelete

Powered by Blogger.