Header Ads



ஜனாதிபதி விருது விழாவில் அவமதிப்பு, மானமுள்ள ஊடக ஆசிரியர்கள் வெளியேறினார்கள்


முதல் முறையாக நேற்று நடத்தப்பட்ட ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவில் நடந்த முறைகேடுகளால் இந்த நிகழ்வை புறக்கணித்து பல ஊடக ஆசிரியர்கள் வெளியேறிச் சென்றனர்.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படாத நிலையில், இந்த ஊடக விருது விழாவை புறக்கணிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிவித்திருந்தது.

அதேவேளை, இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாகவும், சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், நேற்றைய நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த ஊடகங்களின் ஆசிரியர்கள் பலருக்கு உரிய மரியாதையும், அமருவதற்கான ஆசனங்களும வழங்கப்படவில்லை.

ஊடக விருது விழாக்களில் ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு முன்வரிசையில் ஆசன வசதிகள் செய்யப்படுவது வழக்கம்.

நேற்றைய நிகழ்வில் பங்கேற்க ஊடக ஆசிரியர்களுக்கு சரியான இடம் ஒதுக்கப்படாமல், மாடத்தில் அமருமாறு கேட்கப்பட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊடக ஆசிரியர்கள் பலரும் நிகழ்வைப் புறக்கணித்து வெளியேறினார்.

இந்த தவறுகளுக்காக பின்னர் மன்னிப்புக் கோரியுள்ள ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, இதுபற்றி விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. As usual make a commission to investigate... but delay as much as possible as often done... Politicians should first be learned to know how to organize an event.

    ReplyDelete
  2. Mr. Mohammed, do u think this politicians have good knowledge to organize? Fuck this all politicians in Sri Lanka. They are destroying our country economics, passions and the other day to day activities etc.

    ReplyDelete

Powered by Blogger.