Header Ads



இவ்வளவுதான் வாழ்க்கை - படிக்கவேண்டிய பாடம், இன்று நடந்த துயரம்


அடுத்த நொடியில் யாருக்கு எங்கே, எப்படி, என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்கும் ஆற்றல் ஏக இறைவனுக்கு மட்டுமே உண்டு..

பாலக்காடு மாவட்டம் சொர்ப்புளசேரி ஜமாஅத் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பேரக்குழந்தை கிணற்றில் தவறி விழுந்ததை கண்டு பதறிப்போய் காப்பாற்ற இறங்கிய உப்பாவும் நீரில் மூழ்கி இரண்டு பேரையும் ஜனாசாவாக மீட்கப்பட்ட துரந்தம் இன்று -11- நிகழ்ந்தது...

நிரந்தரமில்லாத இவ்வுலக வாழ்க்கையில் முடிந்தளவு நன்மையை மட்டும் ஏவுவோம்... தீமையை தடுக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டால் மனதால் வெறுத்து ஒதுங்குவதோடு அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்..

இறைவன் வழங்கியுள்ள ஞானத்தை துர்பிரயோகம் செய்து சமயம் கிடைக்கும் போதெல்லாம்  பிறரை கடிந்து கொள்ளவும், வசை பாடவும், வெறுப்பை வளர்க்கவும்  மட்டுமே பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..

சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யும் கருத்துக்களின் இடம் பொருள் ஏவல் எனும் தன்மையை புரிந்து கொள்ளாமல் அனர்த்தம் கற்பிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

ஒரு தனிப்பட்ட நபரின் மீதான வெறுப்பு உள்ளத்தில் கசடாக படிந்து வன்மமாக மாறுவதும் ஆரோக்கியமான சூழலுக்கு உகந்ததல்ல...

வல்ல இறைவன் இந்த உப்பாவையும் பேரனையும் உயரிய சொர்க்கத்தில் ஒன்றுகூட செய்வானாக...

2 comments:

  1. From "Allah we come and unto Him is our return". May Allah (SWT) admit both the Grand father and the little kid into Jennathul Firdaus Ameen.

    ReplyDelete
  2. I remember this was happend long time back. I have gone through the same masage Pls correct me if I am wrong

    ReplyDelete

Powered by Blogger.