Header Ads



ஈரானில் இருந்து ஆயுதங்களை கொண்டுவந்த மதுஷின் சகாக்கள் - பிடிபட்டால் என்ன செய்வார்கள் தெரியுமா..?

ஈரானில் இருந்து போதைப்பொருள் மட்டுமல்ல ஆயுதங்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தகவலை இலங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர் கஞ்சிப்பான இம்ரான் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகாக்கள்.

போதைப்பொருட்களுடன் ஆயுதங்கள் கொண்டுவந்து இலங்கையில் மீனவ படகில் மீனவர்கள் போல கடலுக்கு செல்லும் தங்களது ஏஜெண்ட்டுக்களுக்கு அவற்றை விநியோகிப்பதாக மதுஷின் சகாக்கள் தெரிவித்துள்ளனர்.

அப்படி கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள் கொண்ட படகு கடற்படையினரின் பார்வைக்கு சிக்கினால் அல்லது ஆபத்து இருப்பதாக கருதினால் ரெஜிபோம் பெட்டிகளால் ஆன அந்த போதைப்பொருட்களை கடலில் வீசிவிடுவது ஈரான் கடத்தல்காரர்களின் வழக்கம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப்படி வீசப்படும் போதைப்பொருட்கள் அடங்கிய பெட்டியில் ஜீ பி எஸ் தொழிநுட்ப சிம் கார்ட் பொருத்தப்பட்டிருப்பதால் பின்னர் அவற்றை கண்டுபிடித்து உரிய தரப்பிடம் சேர்ப்பது கடத்தல்காரர்களின் வேலை என்பதை விபரித்து கூறியிருக்கின்றனர் மதுஷின் சகாக்கள்.

அண்மையில் தென்மாகாண கடலில் கைது செய்யப்பட்ட ஈரான் கடத்தல்காரர்கள் இப்படி செய்தாலும் அவர்கள் கடலில் வீசிய சில பெட்டிகளை மீட்டது இலங்கை கடற்படை..

அப்படி வந்த நவீன ஆயுதங்கள் எங்கே உள்ளன என்பதையும் ஆராய்கிறது பொலிஸ்…

Tn

No comments

Powered by Blogger.