Header Ads



புலமைப் பரிசில் பரீட்சையை ரத்துசெய்து 7 ஆம் அல்லது 8 ஆம் தரத்தில் பரீட்சையொன்றை நடாத்த திட்டம்

சமகால கல்வி முறைமையில் பாரிய மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொடகம வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்தில் முக்கிய துறைகளில் பிரவேசிப்பவர்களில் 13 சத வீதத்தினரே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் என்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

உயர் தரத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களில் 86 சத வீதத்தினர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்கள். இதனை ஆராய்கின்ற போது தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் பிரச்சினைகள் இருப்பதாக கல்வியியலாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்து தரம் 7 ஆம் அல்லது 8 ஆம் தரத்தில் பரீட்சையொன்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களாக மாணவர்களைக் கல்வி கற்க வழிகாட்டுவது தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.   

No comments

Powered by Blogger.