Header Ads



நாட்டில் 65 வீத மக்களுக்கு மட்டுமே, சுத்தமான குடிநீர் பெறும் வாய்ப்பு


இன்றைய உலகில் சுமார் 2.1 பில்லியன் மக்கள் தமதுவீடுகளில் சுத்தமான நீர் இன்றி வாழ்கின்றனர்.உலகளாவிய ரீதியில் கிராமப்புறங்களில் வழும் 80 சதவீதமான மக்கள் ஆரோக்கியமற்ற மற்றும் பாதுகாப்பற்ற நீர் மூலங்களிலிருந்துபெற்றுக் கொள்ளும் நீரையே பாவிக்கின்றனர்.மேலும் நான்கில் ஓரு ஆரம்ப பாடசாலைகளில் குடிப்பதற்குநீர் இல்லாமல் மாணவர்கள் அசுத்த நீரைப் பருகுகின்றனர். அல்லது அவர்கள் தாகத்தோடு வீடு செல்கின்ற நிலை காணப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.மேலும் எதிர்வரும் 2050ம் ஆண்டளவில் தற்போதுள்ள நீருக்கான தேவையை விட 30சதவீதம் உயர்ந்து காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சுத்தமான மற்றும் போதுமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

தமக்குத் தேவையான சுத்தமான குடிநீர் இன்றி வாழ்கின்ற மக்கள் இன்னும் எமது நாட்டிலும் உள்ளனர். சில பிரதேசங்களில் அதனை பெறுவதற்காக பல முயற்சிகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுத்தமான நீர் இன்மையால் நீர் தொடர்பான நோய்கள் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகளுக்குட்பட்ட நிலையில் வாழும் மக்களும்உள்ளனர்.

தற்போது நாட்டில் 65 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்று வருகின்றனர். மொத்த சனத்தொகையில் 48 சதவீதமானவர்களுக்கு குழாய்நீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதோடு அதனை 2020ம் ஆண்டிக்குள் 60 சதவீதமாக உயர்த்துவதற்கான வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் சுத்தமான குடிநீர் மனிதர்களின் உரிமையாகும்.அடிப்படைத் தேவைகளில் ஓன்றான சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக முயற்சிக்கும் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்கும் மக்களின் குரல்கள் தட்டிக் கழிக்கப்பட முடியாததாகும். அனைவருக்கும் நீரினை வழங்க அடிப்படையாகக் காணப்படும் நீர்மூலங்கள் மற்றும் நீரேந்து பகுதிகளைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.நாட்டிலுள்ள அனைத்து நீர்ஆதாரங்கள்,சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளத்தை தாங்கக் கூடிய இடங்கள் போன்றவற்றை நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் அடிப்படையில் பாதுகாப்பதற்குரிய பொறுப்பு வாய்ந்த நிறுவனம் ஓன்றினை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் நீரேந்து பகுதிகளின் எல்லைகள் அடையாளப்படுத்தப்படுவதுடன் அவறுக்கு இடையூறாகக் காணப்படும் அம்சங்களை இனம் கண்டு அவற்றுக்கான சாத்தியமான மாற்றுவழிகளை முறையான பொறிமுறையூடாக கைக்கொள்ள வேண்டியதும் அவசியம். அத்துடன் நீர் மூலங்களை செம்மைப்படுத்துவதற்கும் தேவையான புதிய நீர்ஆதாரங்களை பெருக்குவதற்குமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அத்துடன் பொதுமக்கள் நீரை வீண்விரயமின்றி பயன்படுத்த வேண்டும். நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும் நேரடியான மற்றும் மறைமுகமான செயற்பாடுகளை முழுமையாக கைவிடல் வேண்டும்.

ஐக்கியநாடுகளினால் 2010ம் ஆண்டு சுத்தமான போதியளவான குடிநீரை பெற்றுக் கொள்வது மனிதர்களின் உரிமை என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இன்னும் தமக்கான சுத்தமான குடிநீரைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் மக்களை இலக்கு வைத்து நிலையான அபிவிருத்தியின் அடிப்படையில் நிதி ஓதுக்கீடுகளையும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அத்துடன் இது தொடர்பாக சமூக மட்டத்தில் பணி செய்கின்ற இதர நிறுவனங்களும் தங்களது முழுமையான பங்களிப்பினை நல்குவதற்கு முன்வர வேண்டும். மேலும் மக்களின் வினைத்திறன் மிக்க பங்கேற்பும் அவசியம்.இவ்விடயத்தில் சிவில் சமூகத்தின் மனோநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு சிவில் அமைப்புக்களின் ஈடுபாடும் இதில் இன்றியமையதாதாகும்.

1 comment:

  1. As per our experts in water resources our ground water level is depleting at a rapid rate, we can very well see the impact on the arid zones; there are many reasons for this situation e.g. deforestation, expanding urbanization & climate change. People should conserve water, avoid waste and use it like gold.

    ReplyDelete

Powered by Blogger.