Header Ads



5 ஆம் தர புலமைப்பரிசில் கட்டாயமில்லை - வெளியாகியது புதிய சுற்றுநிருபம்

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை அனைத்து மானவர்களுக்கும் கட்டாயமில்லை எனக் குறிப்பிட்டு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சையில் சகல மாணவர்களும் தோற்றுவது கட்டாயம் எனத் தெரிவித்து கல்வி அமைச்சால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபத்தை இரத்துச் செய்யுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடந்த வாரம் அறிவுரை வழங்கியிருப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்தப் பரீட்சைக் குறித்து  ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுவின் பரிந்துரைக்கமையயே கல்வி அமைச்சர் குறித்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இது ஒரு ஏமாற்று வித்தை. கட்டாயமில்லை என்றால் பரீட்சை இரத்துச் செய்யப்படவில்லை. விருப்பமானவர்கள் தோற்றலாம் என்பதே பொருள். வசதியானவர்கள் தங்கள் பிள்ளைகளை கிளாஸ் செமினார் என்று அனுப்புவார்கள். பரீட்சையையும் எழுத வைப்பார்கள். சித்தியடைந்ததும் பெரிய பெரிய பாடசாலையில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்வார்கள். வசதியில்லாதவர்களின் நிலை அதோ கதிதான்.

    ReplyDelete

Powered by Blogger.