Header Ads



கொள்வனவு செய்யப்பட்ட, எஞ்சிய 4 ஆடைகளுக்கு என்ன நேர்ந்தது...?


- News first -

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் CCTV காட்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சாய்ந்தமருது சுனாமி மீள்குடியேற்றக் கிராமத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகள் தொடர்பிலான விசாரணைகளின் போது, பெண்கள் அணியும் 5 வெள்ளை நிற உடைகள் கைப்பற்றப்பட்டன. இந்த உடைகள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 19ஆம் திகதி கிரிஉல்ல பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றுக்கு புர்கா ஆடையணிந்து சென்ற மூவரும் சாரதி ஒருவரும் 29,020 ரூபா பெறுமதியான உடைகளைக் கொள்வனவு செய்தனர்.

அவற்றுள் 9 வெள்ளை நிற ஆடைகள் காணப்படுவதுடன், அவற்றை கொள்வனவு செய்வதற்கு முன்னர் மூவர் அளவு பார்க்கும் விதம் CCTV கமராவில் பதிவாகியிருந்தது.

வர்த்தக நிலையத்திலிருந்து இவர்கள் புறப்படுவதற்கு முன்னர், வேனின் சாரதி தொலைபேசியில் உரையாடுகின்றமை இதில் புலப்படுகின்றது.

சாய்ந்தமருது சுனாமி மீள்குடியேற்றக் கிராமத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, சில வெள்ளை நிற ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடைகளின் அளவும், கண்டுபிடிக்கப்பட்ட ஆடைகளின் அளவும் சமமானதாகக் காணப்படுகின்றது.

பருமனான பெண்கள் அணியக்கூடிய ஆடைகளாக இவை காணப்படுகின்றன.

இதன்போது, பெண்களுக்கான சில உள்ளாடைகளையும் இவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

அவை குறைந்தளவான பருமனுள்ளவர்கள் அணியக்கூடியவையாகக் காணப்படுகின்றன.

இதேவேளை, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று இராஜகிரிய ஜயசேகரராம விகாரைக்குச் சென்றதாகக் கூறப்படும் பாத்திமா லத்தீஃபா கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வெள்ளை நிற ஆடையணிந்து நடமாடியுள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும், கொள்வனவு செய்யப்பட்டவற்றில் எஞ்சிய நான்கு ஆடைகளுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

No comments

Powered by Blogger.