April 29, 2019

தப்லீக் பணி முடிந்து பஸ்ஸுக்காக காத்திருந்த, 4 அரபுக்கல்லூரி மாணவர்கள் கைது

குரு­நாகல் நகரில் தப்லீக் ஜமாஅத் பணியில் ஈடு­பட்­டி­ருந்த அரபுக் கல்­லூரி மாண­வர்கள் நால்வர், நாட்டின் நிலை­மைகள் கார­ண­மாக பணியை முடித்து வீடு திரும்­பு­வ­தற்­காக பஸ் நிலை­யத்தில் நின்­றி­ருந்த சமயம் பொலி­சா­ரினால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணை­களின் பின்னர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இச் சம்­பவம் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.

குளி­யா­பிட்­டிய வல­யத்­துக்­குட்­பட்ட அரபுக் கல்­லூரி ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாண­வர்கள் தப்லீக் ஜமாஅத் பணிக்­காக குரு­நாகல் நகரை அண்­மித்த பள்­ளி­வாசல் ஒன்றில் தங்­கி­யி­ருந்­துள்­ளனர். இந் நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்டில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நிலை­மைகள் மோச­ம­டைந்­ததால் தப்லீக் பணியை இடை­நி­றுத்தி சக­ல­ரையும் வீடு செல்­லு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய குறித்த மாண­வர்­களில் இருவர் புத்­தளம் செல்ல வேண்­டிய நிலையில் வழி தெரி­யாது அநு­ரா­த­புரம் பஸ்ஸில் ஏறி­யுள்­ளனர். இத­னை­ய­றிந்த பஸ் நடத்­துனர் அவர்­களை உடன் பஸ்­ஸி­லி­ருந்து இறக்­கி­விட்­டுள்ளார். இந் நிலையில் இவர்கள் மீண்டும் குரு­நாகல் பஸ் நிலை­யத்தில் பஸ்­ஸுக்­காக காத்­தி­ருந்த சக மாண­வர்கள் இரு­வ­ரு­டனும் இணைந்­துள்­ளனர்.

இவர்கள் நீண்ட ஜுப்பா ஆடை­யு­டனும் கைகளில் பயணப் பைக­ளு­டனும் பஸ் நிலை­யத்தில் நின்­றி­ருந்த நிலையில், இவர்கள் மீது சந்­தேகம் கொண்ட பொலிசார் அவர்­களை நோக்கி வந்­துள்­ளனர்.

பொலிஸார் தம்மை நோக்கி வரு­வதை கண்­டதும் இவர்­களில் இருவர் அங்­கி­ருந்து ஓட ஆரம்­பித்­துள்­ளனர். அச் சமயம் இவர்­களில் இரு­வ­ரிடம் அடை­யாள அட்­டைகள் இருந்­தி­ருக்­க­வில்லை என்றும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
ஏன் ஓடி­னீர்கள் எனக் கேட்­ட­தற்கு, தமக்கு சிங்­களம் தெரி­யாது என்­ப­தா­லேயே ஓட முயன்­ற­தாகக் கூறி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து பொலிசார் இவர்கள் நால்­வ­ரையும் கைது செய்து குரு­நாகல் பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்­துள்­ளனர்.

பின்னர் தக­வ­ல­றிந்து இவர்­களை உடன் விடு­விப்­ப­தற்­கான முயற்­சி­களை குரு­நாகல் பிர­தேச முஸ்லிம் பிர­மு­கர்கள் முன்­னெ­டுத்த போதிலும் அது பல­ன­ளிக்­க­வில்லை. எனினும் கைதான இம்மாணவர்கள் தொடர்பான விபரங்களை கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி இவர்கள் தொடர்பான விபரங்களை உறுதி செய்த பின்னரே மறுநாள் நால்வரும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

9 கருத்துரைகள்:

baasai therindukolwadu ewwalaw mukkiyam ena ippodawathu nam samooham purindukkondal sari

மத்ரஸாவும் தப்லீக் ஜமாத்தும் ஒரு குலை தேங்காய் போன்றவை என்பதட்கு இந்த சம்பவமே சிறந்த உதாரணம். ஜுப்பா, தலைப்பாகையை சுன்னாவாக கருத்துவதுடன் தீனையன்றி பிறிதொன்றை கற்பது மார்க்கத்துக்கு முரணானது என்று பாடம் படிக்கிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகளைக் கண்டு ஓடுமளவுக்கு அறிவில்லா நிலை. பரிதாபம்! ஐந்தாம் தரத்தில் மதரஸாவில் சேர்க்கும் குருட்டு கலாச்சாரத்தின் விளைவுதான் இது.

Where is a common sense? We are living in unusual situation and why did Arabic college let them do in TJ. Very wrong decision to go out like this. In suspicion they may have been harmed. So, take care.

The solution from Tablique Jamath, send 40 paisal jamath without NID, the extremist thinking sown by these lads by damning this world and only emphasising the hereafter

sariya sonniga baass good muola nallla varuveenga

No knowledge to choose A/pura,Puttalam bus.
Not conversing in Sinhalese.
No NID.
No any realization on prevailing situations.
Not representing from a matured age.
But: They're on their way to preach religion to fellow community! This is Da'wah?

No knowledge to choose A/pura,Puttalam bus.
Not conversing in Sinhalese.
No NID.
No any realization on prevailing situations.
Not representing from a matured age.
But: They're on their way to preach religion to fellow community! This is Da'wah?

I agreed with Bro. Ali, senceless fellows, how they are going to guide ummah

He Ali you are misunderstanding about thableeg

Post a Comment