Header Ads



சஹ்­ரான் கொல்லப்பட்டமை, இன்னும் உறுதி செய்யப்படவில்லை - அவனை 3 வருடங்களாக தேடுகிறோம்


ஈஸ்டர் ஞாயிறு தின­மன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரி­யென நம்­பப்­படும் தேசிய தவ்ஹீத் ஜமா­அத்தின் தலைவர் கொல்­லப்­பட்டு விட்­டாரா? இல்­லையா? என்­பது இது­வரை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவர் உயி­ருடன் இருந்தால் அவரைக் கைது செய்­வ­தற்கு முஸ்­லிம்கள் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.

அவரைக் கைது செய்­யும்­வரை நாம் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். கைது செய்­யப்­பட்டு விட்டால் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைத்­து­விடும் என பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணான்டோ உட்­பட பாது­காப்பு அமைச்சின் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

நேற்று அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை உட்­பட முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் தலை­மையில் பாது­காப்புச் செய­லா­ளரை கொழும்பில் அவ­ரது செய­ல­கத்தில் சந்­தித்து குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து முஸ்­லிம்­களின் பாது­காப்பு தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணான்­டோவின் தலை­மையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

தேசிய தவ்ஹீத் ஜமா­அத்தின் தலைவர் சஹ்­ரானை நாம் கடந்த மூன்று வரு­டங்­க­ளாகத் தேடு­கிறோம். அவர் மீது எமக்கு தொடர்ந்தும் சந்­தேகம் இருந்து வந்­தது. அவர் மிகவும் புத்­தி­சா­லி­யா­னவர். பேச்­சினால் கவ­ரக்­கூ­டி­யவர்.

அவரின் கீழ் இயங்­கு­ப­வர்கள் படித்­த­வர்கள். இந்த தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்­களில் இரு இளை­ஞர்கள் மாஸ்டர் டிக்ரி பட்டம் பெற்­ற­வர்கள். மற்றொருவர் சட்டத்தரணி இவ்­வாறு படித்­த­வர்கள் மேலும் இருக்க முடியும்.

காத்­தான்­கு­டியில் இடம்­பெற்ற சட்­ட­வி­ரோத நட­வ­டிக்கை கார­ண­மாக நீதி­மன்­றினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டவர். இவ­ருக்கு பிர­யாண தடை உள்­ளது. இவர் ஊருக்கு வெளியே நட­மா­டு­வ­தாக அறியக் கிடைத்­துள்­ளது. இவரைக் கைது செய­வ­தற்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கருத்து வெளி­யி­டு­கையில்;

சஹ்ரான் மௌலவி தொடர்பில் நான் ஏற்­க­னவே சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் கூறி­யி­ருக்­கிறேன் என்றார்.

முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­திகள் இவ் விவ­கா­ரத்தில் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாகத் தெரி­வித்­தனர்.

வெள்­ளிக்­கி­ழ­மை­களில் பள்­ளி­வா­சல்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி வேண்டிக் கொண்டார்.

குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­களில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு பொது­வான இட­மொன்றில் அனு­தாபக் கூட்­ட­மொன்று நடத்­து­வ­தற்கு அனு­மதி கோரப்­பட்­டாலும் பாது­காப்பு கார­ணங்­களைக் கொண்டு அது நிரா­க­ரிக்­கப்­பட்­டது. பள்­ளி­வா­சல்­களில் அனு­தாபக் கூட்டங்களை நடத்தும்படி தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், வை.எம்.எம்.ஏ., மேமன் சங்கம், மலாயர் சங்கம் உட்பட பல சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

vidivelli

2 comments:

  1. ISIS was formed for sake of IRAQ & SYRIA so what is job in other countries than IRAQ & SYRIA . When I was writing about them while they fought with ASSAD regime, JM published some article saying that they were members from Israel & America. The leader was a Yehudi. But we Knew that where from they originated. They were from Iraq. Now you have to accept that they have defeated in IS territory by usa & its allies and remaining were chased away.

    ReplyDelete
  2. தற்கொலையாலிகலின் DNA யும் அந்த பிசாசின் குடும்பத்தினரின் DNA யும் பரிசோதனை செய்தால் தெரிந்துவிடும்,செத்து விட்டானா இல்லையா என

    ReplyDelete

Powered by Blogger.