Header Ads



கொழும்பில் 3 இடங்களில், குண்டுப் புரளி - வதந்திகளால் பதற்றம்

கொழும்பில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி, வான், மோட்டார் சைக்கிள்கள் சுற்றி திரிவது தொடர்பில் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் அவரின் இந்தப்பேச்சுக்குப் பின்னர் இலங்கையர்களிடையே பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இலங்கையில் நடந்த சம்பவங்களின் பார்வை இதோ,

வதந்திகளால் பதற்றம்:

இதேநேரம் தலை நகரின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பரவிவரும் வதந்திகள், குண்டு புரளிகளால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக புரளிகளை கிளப்புவோருக்கு எதிராக சர்வதேச அரசியல் சிவில் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர எச்சரித்தார்.

புரளி கிளப்பிய இருவர் கைது:

குடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை நேற்று பரப்பிய இருவர் புளூமெண்டல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குண்டு புரளிகள்:

இன்று சுமார் மூன்று இடங்களில் குண்டு புரளியால் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொள்ளுபிட்டி ரயில் நிலையத்தில் இருந்த பொதி ஒன்றினால் அங்கு குண்டு இருப்பதாக தகவல் பரவியது. சந்தேகத்துக்கு இடமான அந்த பொதி தொடர்பில் இதன்போது, பாதுகாப்பு தரப்புக்கு தகவல் வழங்கப்பட்டது.

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அதிகாரத்துக்குட்பட்ட கொழும்பு ஒன்று முதல் 15 வரையிலான அனைத்து பகுதிகளிலும் இந்த லொறியையும் வேனையும் தேடி விஷேட தேடுதல்கள் இரவு நேரம் வரை நடத்தப்பட்டது. இதனால் கொழும்பு வாழ் மக்களிடையே பெரும் பதற்றம் நிலவியது.

பிற்பகல் இந்த தகவல் பரவியதால், அரச அலுவலகங்கள் பலவற்றிலும் வங்கிகளிலும் சேவை செய்யும் ஊழிஅயர்கள் நேர காலத்துடன் கடைமைகளை முடித்துக்கொண்டு வீடு நோக்கி சென்றதை அவதானிக்க முடிந்தது.

இந் நிலையில் பிற்பகல் நிலைமைகளை ஆராய்ந்த பொலிசார் இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கினை பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.