Header Ads



கடையை பூட்டிவிட்டு, தலைமறைவாகியிருந்த 2 சகோதரர்களும் பிடிபட்டது எவ்வாறு...?

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்கள் இன்று அதிகாலை நாவலபிட்டிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குண்டுவெடிப்பினை மேற்கொண்டு தலைமறைவாகியிருந்த இரண்டு பிரதான சந்தேக நபர்கள் உட்பட சந்தேக நபர்கள் பயணித்த வேன் வண்டியும் வேன் வண்டியினை செலுத்திய சாரதியோடு மூன்று பேர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை குறித்து நாவலபிட்டி நகரில் உள்ள பள்ளிவாசல் அராபி முஸ்லிம் பாடசாலை போன்ற சந்தேகமான இடங்களை நேற்று நாவலபிட்டி பொலிஸார் இராணுவத்தினர் விஷேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகமான முறையில் வேன் வண்டி ஒன்று மீட்கபட்டுள்ளதோடு, வேன் வண்டியின் சாரதியையும் நாவலபிட்டி பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யபட்ட வேன் சாரதியிடம் விசாரனைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த வேன் யாருடையது இந்த வேனில் பயனித்தவர்கள் யார் என விசாரனைகைள மேற்கொண்ட போதே கொழும்பில் மேற்கொள்ளபட்ட பிரதான குண்டுதாரிகள் இருவர் கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தலைமறைவாகிள்ளதாகவும் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நான் தான் குறித்த வேன் வண்டியில் ஏற்றிவந்ததாகவும் இவர்கள் இரண்டு பேரும் சகோதரர்கள் என பொலிஸாருக்கு குறித்த வேன்சாரதி வாக்குமுலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சாரதியினால் வழங்கபட்ட வாக்குமுலத்தின் முலமாக கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை நிலையத்திற்கு   நிலையத்தினை நாவலபிட்டி பொலிஸார் சுற்றிவளைத்த போதும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டு இருந்தது இதன் போது குறித்த வர்த்தக நிலையத்தில் போடப்பட்டிருநத பூட்டிளை உடைத்து பாதணி விற்பனை நிலையத்திற்குள் புகுந்த பொலிஸார் இரண்டு பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

1 comment:

  1. இவர்கள் மனித மிருகங்கள்

    ReplyDelete

Powered by Blogger.