Header Ads



அமெரிக்க நீதிமன்றத்தில் பதிலளிக்க, கோத்தபாயவுக்கு 29 ஆம் திகதி வரை காலஅவகாசம்


ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதை நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ் ஏஞ்சலிஸ் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவரிடம் அதனை உரிய முறையில் அறிவித்துள்ளதாகவும் நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு சம்பந்தமான பிரதிவாதியான கோத்தபா ராஜபக்ச பதிலளிக்க எதிர்வரும் 29 ஆம் திகதி காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இரண்டு சமஸ்டி சட்டங்கள் இருக்கின்றன. வெளிநாட்டில் சேதத்தை ஏற்படுத்திய குற்றம் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அல்லது வழக்கை தள்ளுபடி செய்யுமாறு மனுவொன்றை தாக்கல் செய்ய பிரதிவாதி தரப்புக்கு சந்தர்ப்பம் இருக்கின்றது.

ஒரு விதத்தில் அவர் பதிலளிக்கவில்லை என்றால், பிரதிவாதியின்றியே வழக்கை விசாரிக்க முடியும்.குற்றவியல் வழக்கு போன்று இந்த வழக்கில் எவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படாது,

எனினும் நிதி இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான நிலையம் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.