Header Ads



2015 தேர்தலுக்கு பின், எச்சந்தர்பத்திலும் ஸஹ்ரானை சந்திக்கவில்லை - என் மீது பழிசுமத்தப்படுகிறது


கடந்த வாரம் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் ஸஹ்ரான் என்பவருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரசுரித்து என் மீது மிக மோசமாக , அபாண்டமாக பழிசுமத்தி என்னுடைய நற் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்தேன் .

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற  பாராளுமன்ற தேர்தலில் நான் வேட்பாளராக இருந்த போது சகல வேட்பாளர்களையும் அழைத்து கலந்துரையாடினார். அந்த சந்தர்பத்தில் ஒரு வேட்பாளர் என்ற அடிப்படையில் நானும் கலந்துகொண்டேன். 

 ஏனைய இந்த தேர்தலில் போட்டியிட்ட சகல முஸ்லிம்  வேட்பாளர்களும் அங்கு கலந்து கொண்டு அவரோடு கலந்துரையாடினார்கள். அவ்வாறன கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையே இன்று என் மீது பழிசுமத்துவதற்காக ஊடகங்கள் பிரசுரித்து எனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க முனைகின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு எந்த சந்தர்பத்திலும் அவரை நான் சந்திக்கவும் இல்லை , அவரின் இயக்கத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்பதை மிகத்தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். மேலும் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும் அவரின் இயக்கமும் என்னுடைய அரசியலில் எனக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கியதும் கிடையாது என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன்.

கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்
ஆளுநர் - கிழக்கு மாகாணம்

1 comment:

  1. உங்களுக்கு எதிராக கருத்துக்களை பகிர்வவர்கள் பயங்கரவாதி பிரபாகரனை தலைவன் என்று சொல்லும் தமிழ் பயங்கரவாதிகள். இந்த பிச்சைக்காரர்களை கணக்கில் எடுக்காதீர்கள். எமக்கு சிங்கள சமூகத்தை தெளிவுபெற செய்தால் போதும்

    ReplyDelete

Powered by Blogger.