Header Ads



2014 இல் இருந்தே ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக, போராடிவரும் ஜம்யதுல் உலமா

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ் ஆயுததாரிகள் செயற்படுவது தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடமும், தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிடமும் நேரடியாக முறையிட்டும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முஸ்லீம் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் சட்டம் – ஒழுங்க அமைச்சரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில், சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களின் தலைமை பீடங்களில் ஒன்றாக இருக்கும் அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை இந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏப்ரல் 25 ஆம் திகதியான நேற்றைய தினம் சர்வமதத் தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தினார்.

இந்த சந்திப்பில் முஸ்லீம் மக்களின் சார்பில் கலந்துகொண்ட அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.ஐ.எம். ரிஸ்வி, இந்த பயங்கரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தாங்கள் பல தடவைகள் தகவல்களை வழங்கிய போதிலும் அவை தொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.

“ ISIS இற்கு இஸ்லாமுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று 2014 ஆம் ஆண்டு யூன் 2 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு நான் கூறியிருந்தேன். அதன்பதிவு அங்கு இருக்கின்றது. அந்த காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கௌரவ கோட்டாபய ராஜபக்ச இருந்தார். அவரிடம் நான் அனைத்து ஆவணங்களையும் கையளித்தேன். கடும் நடவடிக்கைகளை இந்த விடையம் தொடர்பில் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டேன். பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் சிறிலங்காவில் இயங்கும் ISIS உடன் தொடர்புடைய அனைவரினதும் விபரங்கள் கையளிக்கப்பட்டன. அனைத்து விபரங்களும் அந்த ஆவணங்களில் உள்ளடங்கியிருந்தன. நாம் அதற்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றோம் அவர்களை கைதுசெய்யுங்கள் என்று நாம் கூறினோம். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. அவர்கள் எதனையும் செய்யவில்லை. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் திகதி நாம் மூன்று மொழிகளிலும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தோம். அதில் ISIS இற்கும் இஸ்லாமுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மிகத் தெளிவாக அறிவித்திருந்தோம்.

கௌரவ ஜனாதிபதி அவர்கள் பதவிக்கு வந்ததும் நாம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்தித்தோம். அவரிடமும் அனைத்து ஆவணங்களையும் கையளித்தோம். எனினும் எமது கௌரவ ஜனாதிபதிக்கு ஏப்ரல் 16 ஆம் திகதிவரை இவை குறித்து எதுவும் தெரியாது என்பது தெரிகின்றது”.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கும் முஸ்லீம் சமூகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சர்வமதத் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி முன்னிலையில் அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை வாக்குறுதி அளித்தது.

“தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட எமது சகோதர மக்களுக்கு நிதி அளவில் உதவுமாறு நாம் அனைத்து முஸ்லீம் மக்களிடமும், பள்ளிவாசல்கள் சார்பில் அழைப்பு விடுகின்றோம். இது எமது சமூகத்தின் பொறுப்பாகும். தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியவர்களின் உடல்களை எமது மயானங்களுக்கு பொறுப்பேற்கவும் நாம் தயார் இல்லை. நாம் அந்த உடலங்களை பொறுப்பேற்க தயாரில்லை. ISIS இற்கும் இஸ்லாமுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை 2014 ஆம் ஆண்டே நாம் மிகத் தெளிவாக கூறியிருக்கின்றோம். உடனடியாக இனங்களுக்கிடையிலான சுமூகமான உறவை பேணுவதற்கான நிலையங்களை நாடு முழுவதும் உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார். IBC

5 comments:

  1. அப்ப கோத்தாபய இப்ப என்னமோ சொல்றாங்க

    ReplyDelete
  2. ISIS இன் பெயெர் பட்டியல் உங்களுக்கு எப்படி கிடைத்தது? நீங்களும் அதில் சம்மதமா?

    ReplyDelete
  3. Haasif are you ok???your studied only grade7???

    ReplyDelete
  4. Dear Sanajapan,
    I am OK, and what about you?
    If you studied up to grade 3, then I would be up to grade 7. What do you say?

    ReplyDelete

Powered by Blogger.