April 17, 2019

இலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...?


இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. 

இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தலைமையில் சவூதிக்கு விஜயம் செய்துள்ள குழுவினர் சவூதி அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்தையின் போது இவ் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.     

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை முழுமையான வசதிகளையுடைய மருத்துவபீடமாக நிறுவுவதற்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை முழுமையான கருவிகளைக் கொண்டதாக தரமுயர்த்துவதற்கு 187.5மில்லியன் சவூதி ரியால்களை சலுகைக் கடன் அடிப்படையில் இலங்கைக்கு வழங்க சவூதி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.


6 கருத்துரைகள்:

Sri Lanka வுக்கு அதிக நிதி வருவது Muslim நாடுகளில் இருந்துதான்.வேலை வாய்ப்பின் ஊடாக அதிக பணம் வருவதும் அரபு நாடுகளில் இருந்துதான்.ஆனால் 30 வருடங்களாக சில மேலைத்தேய நாடுகளில் இருந்து Sri Lanka வுக்கு பணம் வந்தது எதற்க்காக Sri Lanka வை அழித்து,மக்களையும் கொலை செய்வதர்க்காக.பெரும்பன்மை இன மக்கள் அதிகம் பேர் இதை புரிந்து கொண்டுள்ளனர்.

இதுபோன்ற பாரதூரமான உண்மைக்குப் புறம்பான கருத்துகளைக் கூறி மக்களை வழிகெடுக்கவேண்டாம், அரபு நாடுகள் இலங்கைக்கு உதவிசெய்வதுபோலவே மேலைத்தேய நாடுகளும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உற்பட அதிகமான இலங்கையின் நல்ல பல திட்டங்களுக்கு உதவிசெய்கின்றன, நாட்டின் கல்வி,சமூக முன்னேற்றங்களுக்காக பல ஆக்கபூர்வமான முயற்சிகளுக்காக அவை உதவுகின்றன. ஆனால் துரருஷ்டவசமாக அதைச்செயல்படுத்தும் திறமையும்நேர்மையும் அற்ற உள்ளூர் அதிகாரிகள் அவற்றைத் துஷ்பிரயோகம்செய்து களவாடி அந்த திட்டங்களிள் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர், அந்த வகையில் மிகப்பெரும் கள்வர்கள் அரசியல்வாதிகள். அதை சாதாரண மக்கள், நாட்டின் மக்களின் நலன் விரும்பிகள் தட்டிக்கேட்டால் அது செவிடன் காதில் சங்கூதிய கதையாக மாறிவிடுகின்றது. இதுதான் உண்மை நிலை. இதைவிட்டு தயவுசெய்து கடன்வழங்கும் நாடுகள்,நிறுவனங்களை மாத்திரம் குற்றம் சாடவேண்டாம். அதுபற்றி நல்ல அனுபவத்துடன் தான் வாசகர்களின் நலனுக்காக இதனை எழுதுகின்றேன்.

இலங்கைக்கு என்றுமே உதவுவது முஸ்லிம் நாடுகள் தான். இலங்கையை என்றுமே சீரழிப்பது குழப்பங்கள் விளைவிப்பது பிச்சைக்கார இந்தியா தான்

முஸ்லிம்களின் தாராள மனப்பான்மை புரிந்து கொண்டுள்ள பெரும்பான்மை சிங்களவர்கள் இனி முஸ்லிம்களாக மாறி விடுவார்கள்.

Professional translation service நீங்கள் தவறாக புரிந்துவிட்டீர்கல்.நாம் சொன்னது அந்த மேலைத்தேய நாடுகள் வழங்கும் நன்கொடைகளை அல்ல.புலிகளுக்கு கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வந்த பல் ஆயிரம் பில்லியன் பணத்தை பற்றி,அதனைக்கொண்டு அவர்கள் செய்த அட்டூலியங்கலை பற்றி

Post a comment