April 08, 2019

இந்த அரசை எந்நேரத்திலும் கவிழ்ப்போம், 113 பேர் கூட ரணில் அரசுக்கு இல்லை - சம்பந்தன்

ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தனித்து இயங்கக்கூடிய பலம் இல்லை, நாடாளுமன்றத்தில் 113 பேர் கூட ரணில் அரசுக்கு இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன்தான் இந்த அரசு இயங்குகின்றது. எமது ஆதரவுடன்தான் 119 வாக்குகளுடன் வரவு - செலவுத் திட்டம் நிறைவேறியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நினைத்தால் இந்த அரசை எந்நேரத்திலும் கவிழ்ப்போம். அதனால் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை அனுபவிக்க இந்த அரசு இடமளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் அரசைப் பாதுகாத்து வருகின்றோம் என்று வெளியில் சிலர் விஷமத்தனமான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில், அரசைப் பாதுகாப்பது எமது நோக்கம் அல்ல.

தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவும், நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வைக் காணும் வகையிலும்தான் இந்த அரசுக்கு நாம் ஆதரவு வழங்கி வருகின்றோம்.

இதை அரசுடன் நாம் நடத்தும் பேச்சுகளின்போது தெளிவாகக் கூறியுள்ளோம். அதை உணர்ந்து அரசு செயற்பட வேண்டும். இல்லையேல், அரசுக்கான எமது ஆதரவை விலக்கிக்கொள்வோம். அப்போது அரசு கவிழ்ந்தே தீரும்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதிலும், தற்போது அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அந்தப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு அரசிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம்.

ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு அரசிடம் நாம் கோரியுள்ளோம். ஐ.நா. ஊடாக அரசுக்கு அழுத்தம் வழங்கி வருகின்றோம்.

ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு உதாசீனம் செய்தால் அதன் விளைவு மிகவும் பாரதூரமானதாகவும் மோசமானதாகவும் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

8 கருத்துரைகள்:

பயஙகரவாதிகளோடு கூட்டு வைத்தால் இதுதான் நிலை ரணில் விளங்கிக்கொள்ளட்டும்

சம்பந்தனும், தமிழ் தேசியக் கூட்டணியும் நிச்சியம் பயங்கரவாதிகளல்ல. தயவுசெய்து வாசகர்களை வழிகெடுக்கவேண்டாம். அவர்களுடைய நியாயமான உரிமைகளை அரசின் மூலம்பெற்றுக்கொள்வதை அவர்கள் இலக்காகவைத்திருக்கின்றார்கள். அதில் என்ன தவறு இருக்கின்றது? சரியாக விடயங்களைப் புரியாமல் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்ந்துகொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

@NGK, அப்ப, இலங்கை ISIS ஆட்களுடன் மட்டும் கூட்டு வைக்கலாம என்றும் ஆலோசனை தாருங்க

Millions are eagerly waiting to see this corrupt Govt. toppled, so Aiya why don't you do it, if it is so easy for you. But make sure you return to the Govt. the House and other benefits you received as compensation for losing the Leader of Opposition can you?

ஐயா, punch dialogue நல்லாவே பேசுறீங்க, vijay, ajith வைத்துள அடிக்காதீங்க.

@Ajan இலங்கையில் இருப்பது தமிழ் பயங்கரவாதம் மட்டும் தான் isis என்பது இலங்கையில் இல்லையென்று புலனாய்வு துறையே கூறிவிட உன்னைப்போன்ற பிரிவினைவாதிகள் கூறி என்ன நடக்க போகுது?

@professional Translation Servives
நீர் முகமூடி அணிந்த நரியென்று இங்கு பலருக்கு தெரியும். TNA என்பது ஒரு பயங்கரவாத பிரிவினைவாத இயக்கமே.

தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு முயற்சி எடுக்கும் உரிமையும் பேச்சு சுதந்திரமும் தமிழ் மக்களின் பிரதிநிதியான சம்பந்தன் அவர்களுக்கு உண்டு அதை நாம் மறுதலிக்க முடியாது NGK நமது கருத்துக்களை கொஞ்சம் கவனமாக சிந்தித்து பதிவிடுவது நல்லது தமிழ் மக்களை பொறுத்த வரையில் பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் அவர்கள் என்றோஒரு நாள் நிம்மதியாக வாழ வேண்டும் மரத்தால் விழுந்தவனை மாடு குத்துவதுபோல்தான் இந்த அரசாங்கங்கள் செய்யும் செயற்பாடுகள் இருக்கிறது

Post a Comment