Header Ads



மட்டக்களப்பில் சோகமயம், 10 உடல்களுக்கும் மக்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தினர்


பயணத்தில் ஒன்றாகவே உயிர் பிரிந்து கல்லறையிலும் ஒன்றாகவே உறங்கப்போகும் உறவுகள்!
மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10 பேரினதும் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள், ஹயஸ் வானில் சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பியபோதே விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்கள்.

மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சடலங்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்குக் கொண்டுவரப்பட்டன. 10 பேரின் சடலங்களும் அவர்களின் வீடுகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளதால் சடலங்கள் இறுதி ஆராதனைகளுக்காக மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையை உலுக்கியுள்ள இந்தக் கோர விபத்துச் சம்பவம் மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்குப் பெருமளவானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உறவினர்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தும் காட்சி அனைவரினதும் மனதையும் உருகச் செய்துள்ளது.


1 comment:

  1. வாகனம் செலுத்துதல் என்பது ஒரு கலை. ஆதற்கு மிகக் கூடிய உட்சபட்ச அவதானம் தேவை. வுhகனம் செலுத்துபவர் யாராக இருந்தாலும் தன்னுடன் வரக்கூடியவரகளுக்கு தான்தான் பொறுப்பாளன் என்ற உயர்பட்ச உணர்வு ஓங்கி இருத்தல் வேண்டும். வேகமாக ஓட்டிய இந்தக் குறிப்பிட்ட சாரதியும் செத்துவிட்டார். இவருடைய பொடுபோக்குத்தனத்தினால் இவரை நம்பி இவருடன் பயணித்தவர்களும் தாங்கள் ஏன் சாகிறோம் என்ற அறிவு இல்லாமலேயே இறந்துவிட்டனர். போதையில் வாகனம் செலுத்துதல்இ பேசிக்கொண்டு வாகனம் செலுத்துதல்இ தொலைபேசியில் மூழ்கி இருத்தல்இ நித்திரைத் தூக்கத்தில் வாகனம் செலுத்துதல் - இதன்மூலம் வாகன விபத்தை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்துவது வேண்டுமென்றே கொலை செய்தல் (ஊரடியடிடந hழஅiஉனைந) என்ற சட்டத்தினுள் கொண்டுவரப்பட்டு அப்படியானவர்களுக்கு மரணதண்டனை அளித்தாலும் அதுவும் போதாது. இந்த விபத்தினை நினைப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருக்கின்றது. சினனஞ்சிறு மொட்டுகள்இ இளம் சகோதர சகோதரிகள் - நினைக்கவே பெரும் கஷ்டமாக இருக்கின்றது. இறந்தவர்களுக்கான பிரார்த்தனை ஒன்றுதான் வாசகர்களாகிய எங்களால் செய்யக்கூடியது. கடவுள் எங்கள் அனைவரையும் இப்படியான கோரவிபத்துக்களில் இருந்தும் காப்பாற்றுவானாக.

    ReplyDelete

Powered by Blogger.