Header Ads



புகைப்பதும், மது அருந்துவதும் JVP இல் தடை - லால்காந்தா குறித்து விசாரணை

மக்கள் விடுதலை முன்னணி ஒரு சிறந்த கட்சி என்ற வகையில் புகைத்தல், மது அருந்துதல் என்பவற்றை கட்சி உறுப்பினர்களுக்கு தடை செய்துள்ளதாகவும், கட்சியின் உயர் பீட உறுப்பினர் லால் காந்த தனது விளக்கமறியலில் இருந்து விடுதலையான பின்னர் அவர் குறித்த தீர்மானத்தை கட்சி முன்னெடுக்கும் எனவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அனுராதபுர பிரதேசத்தில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய  குற்றச்சாட்டின் கீழ் ஜே.வி.பி.யின் அரசியல் பீட உறுப்பினர் கே.டி. லால் காந்த 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து கட்சியின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவரது கைது தொடர்பில் கட்சி எந்தவித தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை. நீதிமன்றம் இவருடைய விடயத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவர் விடுதலையானதன் பின்னர் விசாரணை மேற்கொண்டு கட்சியின் தீர்மானத்தை அறிவிக்கும் எனவும் அவர்  கூறினார்.

எமது கட்சி புகைத்தல், மது அருந்துதல் உட்பட மோசமான செயற்பாடுகள் பலவற்றை அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை அடிப்படையாக வைத்து தடை செய்துள்ளது. இது இன்று நேற்று எடுத்த தீர்மானம் அல்ல. பல தசாப்தங்களாக இந்த சம்பிரதாயம் கட்சியில் காணப்படுகின்றது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.