Header Ads



பள்ளிவாசல் தாக்குதலை நேரடியாக ஒளிபரப்பிய பயங்கரவாதி - பேஸ்புக் மீது கடும் விமர்சனங்கள்

கடந்த வாரம் இடம்பெற்ற கிரைஸ்ட்சர்ச் தாக்குதலின் நேரடி ஒளிபரப்பை 200க்கும் குறைவானவர்களே பார்த்திருப்பதாக பேஸ்புக் தகவல் அளித்துள்ளது. இந்த வீடியோவை முடக்குவதற்கு தவறியது குறித்து அந்த சமூக ஊடகத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 50 பேர் கொல்லப்பட்ட இரண்டு பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலின்போது துப்பாக்கிதாரி 17 நிமிடங்கள் ஓடக்கூடிய நேரடி வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார்.

அந்த வீடியோ அகற்றப்படும் முன்னர் 4,000 தடவைகள் பார்க்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த வீடியோவின் பிரதிகள் பரவுவதை நிறுத்துவதற்கு பேஸ்புக் கடுமையாக போராட வேண்டி ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து தீவிரவாத விடயங்கள் பேஸ்புக்கில் பகிரப்படுவது குறித்து அந்த நிறுவனம் மேலும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று பல உலகத் தலைவர்களும் அழைப்பு விடுத்தனர்.

இதன் அசல் வீடியோ அகற்றப்பட்டபோதும் பிரதி எடுக்கப்பட்ட வீடியோக்கள் யூடியுப், ட்விட்டர் போன்ற ஏனைய சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பேஸ்புக் வெயிட்டிருக்கும் அறிவிப்பில் நேரடி ஒளிபரப்பு முடிவுற்று 12 நிமிடங்களுக்கு பின்னரே அந்த வீடியோ பற்றி முதலாவது பயனர் அறிவுறுத்தினார்.

இந்த அறிவுறுத்தல் வரும் முன்னரே பயனர் ஒருவர் அதன் இணைப்பை பிரதி எடுக்கத்து கோப்பு பகிர்வு தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற முதல்நாளில் இந்த வீடியோவின் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை அழித்ததாக பேஸ்புக் முன்னதாக குறிப்பிட்டிருந்தது. இதில் 1.2 மில்லியன் பிரதிகள் அவை தரவேற்றப்படும்போது அழிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.

No comments

Powered by Blogger.