Header Ads



கட்டுநாயக்கா வந்த, அமெரிக்க விமானத்தால் குழப்பம் - வெளியேறவிடாது நிறுத்திய அதிகாரிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கிய அமெரிக்க விமானத்தினால் குழப்ப நிலை ஏற்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான C-2 ரக சரக்கு விமானம் ஒன்று இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த விமானத்தில் பயணித்தவர்களின் பெயர் பட்டியல், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை.

பொதுவாக எந்தவொரு விமானமும், விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட பின்னர் அதன் பயணிகள் குறித்த பெயர் பட்டியல் வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு வழங்காமல் விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் இருந்து வெளியேற்ற முடியாது என குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெளிவிவகார அமைச்சின் ஊடாக C-2 ரக விமானத்தில் பயணித்தவர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் விமான நிலைய சுங்கம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

  1. இது போன்ற சட்டத்தை மீறும், இந்த நாட்டின் சட்டத்தை நிலைநாட்ட துணையாக உள்ள அதிகாரிகளுக்கு மென்மேலும் தொந்தரவு தொடரும்.அதற்கு பிரதான காரணிகள் பிரதமரும் சனாதிபதியும் ஆவார்கள். இரகசியமாக அமெரிக்காவுக்கு அடிமையாகும் சட்டத்துக்கு அவர்கள் இருவரும் ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டார்கள். எனவே இந்த சனியன் இந்த நாட்டின் அதிகாரிகளுக்கு தொடர்ந்து இட்டுக்கட்டையாக அமையப் போகிறது. இதுபற்றி பொதுமக்கள் பிரதான ஆட்சியாளர்கள் இருவரிடமும் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. This is drop from the arrogancy of U.S.A... toward the world. ...

    They do not know or do not want to respect the law of another country but they expect others to respect there law??

    Well done srilankan officers....

    Sombody has sold the savovriginity of our country for small Dollars...Find the and punish them too.

    ReplyDelete
  3. Little by little American plots and games will be taking place in the country, in the long term it will be disastrous.

    ReplyDelete

Powered by Blogger.