March 08, 2019

க‌ல்முனையின் நிலை என்ன‌வாகும் என சிந்தித்து, சாய்ந்த‌ம‌ருது ‌கோரிக்கையை கைவிட வேண்டும்

கோடீஸ்வ‌ர‌ன் பாராளும‌ன்ற‌த்தில் பேசும் போது க‌ல்முனையில் த‌மிழ‌ர்க‌ள் 93 வீத‌ம் என‌ சொல்லியுள்ள‌த‌ன் மூல‌ம் அவ‌ர் சொல்லும் க‌ல்முனை எது என்ப‌தையும் சாய்ந்த‌ம‌ருது பிரிந்தால் க‌ல்முனையின் நிலை என்ன‌வாகும் என்ப‌தையும் கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் சிந்திக்க‌ வேண்டும்.

உண்மையில் க‌ல்முனை என்ப‌து ம‌ருத‌முனை தொட‌க்க‌ம் சாய்ந்த‌ம‌ருதின் முடிவு வ‌ரையாகும். இத‌ற்குள் முஸ்லிம்க‌ள் சுமார் 70 வீத‌ம் வாழ்கிறார்க‌ள்.  ஆனால் கோடீஸ்வ‌ர‌ன் சொல்லும் க‌ல்முனை என்ப‌து க‌டற்க‌ரைப்ப‌ள்ளி வீதி தொட‌க்க‌ம் பாண்டிருப்பு வ‌ரையாகும். இத‌ற்குள் வாழ்வோர் பெரும்பாலும் த‌மிழ‌ர்க‌ளே. க‌ல்முனை ந‌க‌ரில் வ‌ர்த்த‌க‌ நில‌ங்க‌ள் முஸ்லிம்க‌ளுக்கு சொந்த‌மாக‌  இருந்த‌ போதும் ப‌ல‌ரும் த‌ம்மை க‌ல்முனை கிராம‌ சேவ‌க‌ர் பிரிவில் த‌ம‌து பெய‌ர்களை ப‌திந்து க‌ல்முனை ந‌க‌ருக்குரிய‌ வாக்காள‌ர்க‌ளாக‌ ப‌திவு செய்யாத‌த‌ன் விளைவு இது. இத்த‌கைய‌ ப‌திவை மேற்கொள்ளும்ப‌டி சுமார் 10 வ‌ருட‌த்துக்கு முன் உல‌மா க‌ட்சி க‌ல்முனையில் பிர‌சுர‌ம் கூட‌ வெளியிட்டிருந்த‌து. ஆனாலும் க‌ல்முனையின் அதிகார‌த்தில் இருக்கும் க‌ட்சியின‌ரும் பொது ம‌க்க‌ளும் வ‌ர்த்த‌க‌ர்க‌ளும் இத‌னை க‌ருத்தில் எடுக்காத‌த‌ன் விளைவே கோடீஸ்வ‌ர‌னின் இத்த‌கைய‌ இன‌வாத‌ க‌ருத்தாகும்.

அத்துட‌ன் க‌ல்முனை ந‌க‌ருக்கென‌ த‌னியான‌ கிராம‌ சேவ‌க‌ர் பிரிவு உருவாக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்திருந்த‌து. ம‌க்க‌ள் அதிகார‌ம் இன்மை கார‌ண‌மாக‌ இவ‌ற்றை எம்மால் பெற‌ முடிய‌வில்லை. ம‌க்க‌ள் அதிகார‌ம் உள்ள‌ முஸ்லிம் காங்கிர‌சும் செய்ய‌வில்லை.

ஆக‌வே சாய்ந்த‌ம‌ருதுக்கு ச‌பை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டால் அதோ சாய்ந்த‌ம‌ருதுக்குக்கு ச‌பை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு விட்ட‌து எம‌க்கு த‌ர‌ முடியாதா என‌ கார‌ண‌ம் காட்டி த‌மிழ‌ர்க‌ள் காட்டியுள்ள‌ எல்லைக்குள் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பையை முட‌க்கும் கோரிக்கையை த‌மிழ் கூட்ட‌மைப்பு முன் வைப்ப‌த‌ற்குரிய‌ முன்னோடி ந‌ட‌வ‌டிக்கையே கோடீஸ்வ‌ர‌னின் பேச்சாகும்.

ஆக‌வே நாம் ம‌ன்றாடி கேட்டுக்கொள்கிறோம். சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ளின் மேய‌ர் ப‌த‌வியை ப‌றித்த‌ ஹ‌க்கீமின் முஸ்லிம் காங்கிர‌சை  ஒழித்து   சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ த‌னியான‌ ச‌பை கோரிக்கையை கைவிட்டு முழு க‌ல்முனையையும் ப‌ல‌ப்ப‌டுத்த‌ வாருங்க‌ள் என‌ சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ளை கேட்டு  கொள்கிறோம்.

- உல‌மா க‌ட்சி

2 கருத்துரைகள்:

அந்த வஸ் போயிட்டு இப்பதான் நீங்க ஒளும்பினயா

அம்பாரை மாவட்டத்திலே தமிழ் முஸ்லீம் பிரதேசங்களில் தமிழர்களும் முஸ்லீம்களும் கடந்த காலங்களிலே மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வரலாறு எம்மை பரவசமடையச் செய்கின்றது. பிரதேச சபைகள், பிரதேசசெயலகங்கள்,கூட்டுறவுச்சங்கங்கள், வைத்தியசாலைகள், சந்தைகள்,
விவசாய உற்பத்தி மத்திய நிலையங்கள், கால்நடை வளர்ப்பு சங்கங்கள், அதன் வைத்தியசாலைகள்,
மீன்பிடிசங்கங்கள்அதன் காரியாலயங்கள் போன்றவையெல்லாம் இரு இனத்தாருக்கும் பொதுவானவையாக
கடந்தகாலங்களில் இருந்தன. அங்கெல்லாம் தமிழ் முஸ்லீம் சிங்கள உத்தியோகத்தர்கள் பணிபுரிந்ததுடன் இரு இன மக்களும் தங்களுக்கான சேவைகளையும் மன நிறைவுடன் பெற்றுவந்தனர். அவ் உத்தியோகத்தர்களின் திருமண
நிகழ்வுகள் ,மரணச்சடங்கு நிகழ்வுகள் பண்டிகை திருநாட்கள்
போன்றவைகளில் ஒற்றுமையாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர்
நல்லெண்ணங்களை வளர்த்து கொாண்ட சம்பவங்கள் பல உள்ளன.இதனால் ஒருவருக்கொருவர்
சகோதர்களாக நண்பர்களாக பழகி வந்தோம்.
ஆனால் காலப்போக்கில சில உத்தியோகத்தர்களின் சுயநலப்போக்கிலும் சில அரசியல் வாதிகளின் இனத்துவேச செயற்பாடுகளினாலும் தனித்தனியாக
காரியாலயங்களும் உள்ளூராட்சி சபைகளும் பிரிக்கப்படவேண்டும் என்ற
கோசங்கள் எழுப்பட்டு பிரிவினை வாதங்கள் பேலேங்கி பிரிவினைகள்
நடந்துகொண்டே வருகின்றன.அந்த அடிப்படையிலே கல்முனை விவகாரமும் நடைபெறுகிறது. இவைகளுக்கப்பால் சாய்ந்தமருதும் பிரிபட வேண்டுமென்ற பிரதேச வாதமும்
எமக்குள்ளே எழுந்து கொண்டிருப்பதை நாம்
ஜீரணித்துத்தான் ஆகவே ண்டும்.
எனவே இனவாதமும் பிரதேசவாதமும்
எம்மத்தியிலே வேரூன்றி வியாபிப்பதற்கு நீர் பாச்சி உரமிட்டு அவைகளை வளர்த்துக்கொண்டிருக்கும் அரசியல்
வாதிகளும் உள்ளூர் தலைமைகளும் மறுபுறம் சமூக ஒற்றுமை பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் புரிந்துணர்வு பற்றியும் மேடைக்கு மேடை பேசிவருவது விந்தையாகவுள்ளது.இந்தலட்சனத்தில்
வட கிழக்கு இணைப்பு என்பது எவ்வாறு சாத்தியம்?
ஒவ்வொரு தனி நபர்களுக்குள்ளும்
உருவாகும் போட்டி,பொறாமை,காழ்புணர்ச்சி,அகங்காரம்,கர்வம்,சுயநலம் போன்ற துர்க்குணங்கள்தான் இனத்துவேசத்துக்கும் பிரதேசவாதங்களுக்கும் சமூக அளவிலே வித்தாக அமைகின்றது. இதனால் எம்மத்தியிலே
உருவாகும் அரசியல் சமூக சமய தலைவர்கள் இத்துர்குணங்களுக்கு எந்த அளவில் ஆள்படுகின்றார்கள்
என்பதை பொறுத்தே அவரை பின்பற்றுகின்ற சமூகத்தின்போக்கயும்
அறிந்து கொள்ள முடியும். பொதுமக்கள் ஒருபோதும் இவற்றிற்காக முன்வருவதில்லை தலைமைகள்தான் அவர்களை தூண்டி உசுப்பேத்துபவர்கள். எனவே எல்லோரும் மனிதர்கள்தான் உணர்சிகளும் உணர்வுகளும் பொதுவானவை.அத்தோடு வளங்களும்
வாப்புகளும்,நீதி,நியாயங்களும்,எல்லா உரிமைகளும் எல்லோருக்கும் சமம்
என்ற கோட்பாடுகளை பின்பற்றக்கூடிய தலைமைகள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உருவாக வேண்டும். இதன்மூலம் நாம் தேடிக்கொண்டிருக்கின்ற இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பெற்றுக்கொள்ள முடியும். முஸ்லீம் சமூகம் இதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.இருப்பது கடமையாகும். இஸ்லாமிய சமூகத்தில் இவ்வாறான தலைமைகள்
உருவாக வில்லையென்றால் நாம் பெயரளவிலே இஸ்லாத்தை பின்பற்றுகின்றோமே தவிர எம்மிடம்
அதன் நடைமுறைகள் இல்லை என்பதுதான் அதன் அர்த்தமாகும்.

Post a Comment