Header Ads



நெதர்லாந்தில் மக்கள்மீது, சூடு நடத்திய நபர் கைது

நெதர்லாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நெதர்லாந்தின் Utrecht நகரில் உள்ள டிராம் வாகனத்தில் இன்று காலை 10.45 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் 3 பேர் பலியானதோடு, 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தாக்குதல் முடிந்த சில நிமிடங்களில் மர்ம நபர் ஒரு ரெனால்ட் க்ளோயை கடத்த முயன்றதாகவும், அந்த கார் புறநகர்ப்பகுதியில் 1 மணிநேரத்திற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு குற்றவாளியை தீவிரமாக தேட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளி கொக்மன் டனிஸ்(37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் எப்படி, எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை. இந்த தாக்குதலுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட கொக்மன் தந்தை, என் மகன் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், கடும் தண்டனை கொடுங்கள் என ஆவேசமாக பேசியிருக்கிறார்.

No comments

Powered by Blogger.