Header Ads



பள்ளிவாசல் நிர்வாகிகளே, மத்­ர­ஸா தலைவர்களே இது உங்களின் கவனத்திற்கு...!

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் நடாத்தும் நட­மாடும் சேவை­க­ளி­னூ­டாகப் பெற்­றுக்­கொள்­ளப்­படும் அரபு மத்­ர­ஸாக்கள், தக்­கி­யாக்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­களின் பதி­வுகள் தொடர்­பான விண்­ணப்­பங்­களை மேல­திக நட­வ­டிக்­கை­க­ளுக்­காக உட­ன­டி­யாக வக்பு சபைக்கு அனுப்­பி­வைக்­கு­மாறு வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ். எம். எம். யாஸின் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அரபு மத்­ர­ஸாக்கள், தக்­கி­யாக்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­களைப் பதி­வு­செய்­வ­தற்­கான ஆவ­ணங்­களைப் பரி­சீ­லித்து அவற்றை உட­ன­டி­யாகப் பதி­வு­செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இவை வக்பு சபையில் பதிவு செய்­யப்­ப­டாது தொடர்ந்து இயங்­கிக்­கொண்­டி­ருந்தால் எதிர்­கா­லத்தில் பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாஸின் தெரி­வித்தார்.

அரபுக் கல்­லூ­ரி­களும் பள்­ளி­வா­சல்­களும் வக்பு சபையில் பதி­வு­செய்­யப்­பட்­டாலே எதிர்­கா­லத்தில் வழங்­கப்­படும் அரச உத­வி­களைப் பெற்றுக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்றும் கூறினார்.

எதிர்­வரும் 14 ஆம் திகதி வக்பு சபையின் அமர்வு நடை­பெ­ற­வுள்­ளது. அவ்­வ­மர்வில் நட­மாடும் சேவை­யின்­போது சேக­ரிக்­கப்­பட்ட அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் பள்­ளி­வா­சல்­களின் பதி­வு­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­படும். பள்­ளி­வா­சல்­களில் நிலவும் நிர்­வாகப் பிரச்­சி­னைகள் தொடர்­பாக கிடைக்­கப்­பெற்­றுள்ள முறைப்­பா­டு­க­ளுக்கும் தீர்வு வழங்­கப்­படும் என்றார்.

இதே­வேளை உடு­நு­வர, யடி­நு­வர தேர்தல் தொகு­தி­க­ளுக்­கான முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் நட­மாடும் சேவை கடந்த 2 ஆம் திகதி தவு­ல­கல – வஹங்கே அல்– அறபா மகா­வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

எதிர்­வரும் 30 ஆம் திகதி ஹாரிஸ்­பத்­துவ தேர்தல் தொகு­திக்­கான முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் நட­மாடும் சேவை அக்­கு­றணை அல் –அஸ்ஹர் மத்­திய கல்­லூ­ரியில் இடம் பெற­வுள்­ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலு வல்கள் திணைக்களம் நாடு தழுவிய ரீதியில் நடமாடும் சேவைகளை நடத்தி அரபுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிவாசல்களின் பதிவுகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினை களுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளது.

3 comments:

  1. This is a good move to register all Arabic colleges, mosques,and religious institution. Islamic groups have divided Muslim community in different lines to milk public. it is better to have a system like this.. So, many Islamic groups each fight one another for domination. So called moderate groups too fight one another for domination. other groups too do the same.

    ReplyDelete
  2. If PURE FORM of ISLAM (as taught by Muhammed sal) had been taught to Muslims in this land by whoever in authority.. No groups would have raised to today extend...

    So the blame for this many division not only goes to group.. But also to the authority who failed to do their job in proper way too.

    Hope If the Authority Guide Muslims toward Pure form of Islam as was understood and practiced by Sahaaba (ral)...all will unit. If they fail to their JOB... division is inevitable.

    ReplyDelete
  3. If PURE FORM of ISLAM (as taught by Muhammed sal) had been taught to Muslims in this land by whoever in authority.. No groups would have raised to today extend...

    So the blame for this many division not only goes to group.. But also to the authority who failed to do their job in proper way too.

    Hope If the Authority Guide Muslims toward Pure form of Islam as was understood and practiced by Sahaaba (ral)...all will unit. If they fail to their JOB... division is inevitable.

    ReplyDelete

Powered by Blogger.