Header Ads



பள்ளிவாசலுக்குள் சுட்ட, பயங்கரவாதியின் குடும்பம் தலைமறைவு: வெட்கத்தில் ஊர் மக்கள்!

நியூஸிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவனின் குடும்பமே தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் கிராஃப்டன் பகுதி மக்கள், தங்கள் ஊர் தலைப்புச் செய்தியாகியுள்ள நிலையில் இப்படி ஒரு மோசமான நிகழ்வால் அது முக்கியத்துவம் பெற்றதை எண்ணி வெட்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நியூஸிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 49 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த பிரெண்டனின் தந்தை ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், அவனது தாயும், சகோதரியும் அவுஸ்திரேலியாவிலுள்ள கிராஃப்டன் என்ற ஊரில் வாழ்ந்து வந்தனர்.

பிரெண்டன் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தொலைபேசியில் அழைத்ததை தொடர்ந்துதான், தனது மகன் இப்படி ஒரு கோர செயலை செய்ததை அவனது தாய் Sharon தெரிந்து கொண்டார்.

பொலிசார் அவர்களை விசாரித்ததைத் தொடர்ந்து Sharonம் பிரெண்டனின் சகோதரியான Laurenம் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேநேரத்தில் அதே ஊரில் வசிக்கும் பிரெண்டனின் பாட்டியான Joyce, பிரெண்டன் ஆண்டுக்கு இரண்டு முறை குடும்பத்தை சந்திப்பதுண்டு என்றும், அவன் ஒரு நல்ல பையன், அவனைக் குறித்து கேள்விப்படும் விடயம் அதிர்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.