Header Ads



உலகிலேயே சிறந்த சித்திர கலைஞராக, இலங்கையைசேர்ந்த பாலர் பாடசாலை சிறுவன் தெரிவு


உலகிலேயே சிறந்த சித்திர கலைஞராக இலங்கையை சேர்ந்த 5 வயதான சிறுவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உலக உணவு தினத்தை முன்னிட்டு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடததப்பட்ட சித்திர போட்டியில் இலங்கை சிறுவன் முதலிடத்தை பெற்றுளள்ளார்.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள பாலர் பாடசாலையில் கற்கும் தினுக டி சில்வா என்ற மாணவரே இலங்கைக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் உணவு தொடர்பான அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் இந்த போட்டி நடத்தப்படுகின்றது.

“எங்கள் செயற்பாடு எங்கள் எதிர்காலம்” 2030 ஆம் ஆண்டில் பசியை வெற்றி உலகை உருவாக்குதல் என்ற தலைப்பில் இந்த சித்திர போட்டி இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற இந்த போட்டியில் 118 நாடுகளில் இருந்து 8000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. 5 - 8 வயதுக்கு உட்பட 118 நாடுகளின் போட்டியாளர்களில் இலங்கை சிறுவன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

பழங்கள், மரக்கறிகள் மற்றும் விதை வகைகள் முகில்கள் ஊடாக பூமிக்கு விழுவதனை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை சிறுவன் படத்தை வரைந்திருந்தார்.

குறித்த சிறுவன் இலங்கைக்கு பெருமை தேடித் தந்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை - மாலைத்தீவு தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்ந வெற்றியை எதிர்பார்க்கவில்லை எனவும், தங்களுக்கு இது மிகப்பெரிய பெருமைக்குரிய விடயம் எனவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

4 comments:

Powered by Blogger.