Header Ads



இயக்கமும், உலமாக்களும்

இந்திய தேசத்தில் இஸ்லாமியர்கள் சிறுக சிறுக தன் உரிமையை இழந்துவிடுமோ என்ற அபாயம் காத்திருக்கிறது என்று கூறினால்  முஸ்லிம்கள் நம்பமாட்டார்கள், மற்றவர்களும் நம்ப மறுப்பார்கள், ஆனால் எதார்த்தம் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். அரசியல், அதிகாரம், பொருளாதாரம், கல்வி, மார்க்க விடயங்கள் என்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கும் இஸ்லாமிய சமூகம் ஒவ்வொரு துறையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறது, சமூகம் இவைகளுக்கு எவ்வாறு எதிர்கொள்வது ஒரு அதிகாரமிக்க சமூகமாக மாறுவது எவ்வாறு, ஆனால் பெரும்பான்மையான சமூகத்தினர் பார்வையாளர்களாக இருந்தால், வாழ்விடத்தை இழந்து அகதிகளாக வெளியேறும் அவல நிலைக்கு தள்ளப்படுவோம். பேரழிவு, இயற்கை இடர்பாடு காலங்களில் தன் எழுச்சியாக முன்வந்து உதவும் ஒரு சமூகம், தேர்தல் காலங்களில் ஏன் தனது பிரதிநிதியை தேர்தெடுக்க பொருளாதார ரீதியாக உதவி செய்ய முன்வரவில்லை; இந்த சமகாலத்தில் இச் சமூகம் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் சமூக வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் நாள் தோறும் அதிகரித்து கொண்டு செல்கின்றன. இவைகளை எப்படி அனுகுவது, இவைகளுக்கான தீர்வு வழங்குவதில் சமூகத்தில் உள்ள அறிவுஜீவிகளின் கடமை; அவர்களை அடையாளம் காண்பது இச் சமூகத்தின் கடமை.

“சமூகத்தின் தலைவிதிகளுக்கு முகம் கொடுக்கும்போது சமூகமோ தனிமனிதனோ தமக்குரிய பொறுப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடியாது” - அலிஷரீஅத்தி. 

இங்கு சமூகம் கொள்கை ரீதியாகப் பிளவுவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை; இஸ்லாமிய சிந்தனை மனிதனைப் பிரிவுகளற்ற ஐக்கியத்திற்குத் தயார்படுத்துகிறது. ஆனால் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாம் ஜனநாயக நாட்டின் பொது தேர்தல் காலங்களில் கூட ஒர் அணியில் நிர்க்க மறுக்கிறோம் ஆனால் பல பிரிவாக இருக்கும் எதிரிகள் ஒரு அணியில் நின்று நம்மை தனிமைபடுத்துகின்றனர் பொது சமூகத்திலிருந்து.

இஸ்லாமிய இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி உலகைப் படைத்துக் கொண்டு சமூக பொது நடவடிக்கைகளை தனி தனியாக இயங்குவது முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். முதலில் இயக்கங்கள் கொள்கைகாக தொடங்கி பின்னார் அது அதன் தலைமையின் தனிப்பட்ட சிந்தனையில் செயல்படுகின்றன; இங்கு சமூக சிந்தனையும் இல்லை ஒரு வெங்காயமும் மில்லை இது தான் இன்றைய இஸ்லாமிய அமைப்பின் நிலை.

வரலாற்றில்; அன்று இந்திய விடுதலைப் போரில் பெரும் பங்கு ஆற்றிய உலமாக்கள்; அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது, உலமாக்கள் பள்ளிவாசல்களை வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய வரலாறு உண்டு; ஆனால் இன்று அரசியலில் தலைமையற்றவர்களாக இச் சமூகம். வெள்ளிக் கிழமை ஜீம்மா மேடைகள்  எல்லாம் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, ஜீம்மா மேடைகளில் உரமேற்றியதின் விளைவு இச் சமுதாயம் முழுமையாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போரடியது; ஆங்கிலேயரின் உடை, கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்துவாக்கள் அளித்தனர் அந்த உலமாக்கள் வீரமிக்கு விளங்கினார்கள்.

ஆனால் இன்று உலமாக்கள் அரசியல்படுத்த படவில்லை, சமூகம் சார்ந்த விடயங்கள் பேசும் பொருளாக இல்லை மார்க விடங்கள் மட்டுமே அதிகமாக பகிரப்படுகின்றன. இதில் இன்றைய அரசியல் பற்றிய விடயங்கள் மிக குறைவு ஜீம்மா மேடைகளில், இது இப்போதைய இஸ்லாமிய கல்வி நிலையங்களில் விளைவு, மார்க கல்வி, உலக கல்வி என்று பிரிந்ததால் அதன் இந்த விளைவுகளை நாம் கண்கூடாக பார்க்கின்றோம், இவைகளில் மாற்றம் ஏற்பட அன்று விடுதலை போரில் சமூகத்தை பெறும் பங்காற்ற வைத்த உலமாக்கள் இன்று இச்சமூகத்தினரை முழுமையாக அரசியல்படுத்த படவேண்டும். சமூகம் அரசியல் விழிப்புணர்வு பெற்றால் நமது தலைமை தன்னால் மாறும், கடந்த எழுபது ஆண்டுகளா சுதந்திர வரலாற்றில் நமக்கான தலமையை தேர்தெடுக்கப்படாமல்,  நமக்கு திணிக்கப்பட்ட  தலைமையில் தான் உள்ளோம். இவைகள் மாற அரசியல் விழிப்புணர்வு பெற்ற சமூகமாக மாறுவோம்.

 “எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை" (குர்ஆன்:13:11)

- நூர் முகம்மது-

No comments

Powered by Blogger.