Header Ads



மதுஷ் + கூட்டாளிகளின் சொத்துக்களை, அரசுடமையாக்கும் முயற்சி தீவிரம்

மாகந்துரே மதுஷ், அவரது கூட்டாளிகள் மற்றும் அவருக்கு மறைமுகமாக உதவிய அனைவரது சொத்துக்களையும் அரசுடமையாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நபர்களுக்கு எதிராக ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் அறிக்கைகளை தாக்கல் செய்ய ஆவணங்கள் தயார்ப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறப்படுகிறது.

இவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தின் மூலம் பெருமளவில் பணத்தை உழைத்து அதனை பயன்படுத்தி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரிகள் என அறிந்தும் தொடர்ந்தும் உதவி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, சொத்துக்களை பறிமுதல் செய்து, அவற்றை அரசுடமையாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் கூறுகின்றன.

1 comment:

  1. ஆம் அவை அனைத்தும் நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே நடைபெற வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கு வௌியில் எதுவும் நடைபெறக்கூடாது. ஏனெனில் வௌிநாடுகள் குறிப்பாக துபாய் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதனாலும் உலக நாடுகள் அனைந்தும் இந்த மதுஷ் விவகாரத்தை உன்னிப்பாககக் கவனித்து வருவதனாலும் நீதிமன்றத்துக்கு வௌியில் நடைபெறும எந்த முடிவுகளும் இலங்கையின் வௌிநாட்டு உறவுகள்,அதன் பொருளாதார, அரசியல் உறவுகளையும் சர்வதேசமட்டத்தில் நிச்சியம் பாதிக்கும். தற்போது அரசியல் வாதிகள் தேர்தல்,பதவி என இரவு பகலாக யோசித்து திட்டமிட்டு வரும் காலகட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற் எடுக்கும் எந்த தீர்மானங்களும் அரசாங்கத்தையும் அதன் இருப்பையும் நிச்சியம் பாதிக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.