March 31, 2019

இனி நான் பள்ளிவாசல், பக்கமே போகமாட்டேன்...!

மகன் தன் தந்தையிடம், *அப்பா இனி நான் பள்ளிவாசல் பக்கமே போகமாட்டேன்* என்று கூறினான்.
*தந்தை:* எனது அருமை மகனே...ஏன் இப்படி சொல்லுகிறாய்... உனக்கு என்ன நேர்ந்தது...
*மகன்:* 
*பள்ளியில் இமாம் குத்துபா ஓதும்போது* 
*சிலபேர் தங்கள் செல்போனில் வாட்சப், பேஸ்புக் பார்க்கின்றனர்.* 
*வெளியில் அமர்ந்து புறம் பேசுகின்றனர்.*
*சிலர் அதையும் மீறி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம் காட்டித்தராத பல பித்அத்களை அரங்கேற்றுகின்றனர்.* 
*என்னால் கவனமாக இமாமின் உரையை கேட்க முடியவில்லை.*
*தொழுகையில் செல்போன் சத்தமாக ஒலி எழுப்புகிறது என்னால் கவனமாக தொழுகை முடியவில்லை...*
இனி நான் வீட்டிலேயே தொழுதுகொள்கிறேன்.
*தந்தை:* சிறு யோசனைக்கு பிறகு.... எனது அருமை மகனே... *நான் ஒரு போட்டி வைக்கின்றேன் அதில் நீ வெற்றிபெற்றுவிட்டால் இனி நீ பள்ளிக்கு செல்ல வேண்டாம்.*
*மகன்:* தந்தையே சொல்லுங்கள் அப்படி என்ன போட்டி...
*தந்தை:* மிக எளிதான போட்டி தான்.. ஒரு கண்ணாடி டம்பளரில் முழுவதும் நீர் நிரப்பி இந்த பள்ளிவாசலை மூன்று முறை சுத்தி வர வேண்டும்.
*மகன்:* தந்தையே இது அவ்வளவு கடினமான போட்டி இல்லையே... 
இதோ உடனே முடித்து காட்டுகின்றேன்.
*தந்தை:* போட்டியில் ஒரு நிபந்தனை: டம்பளரிலிந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தக்கூடாது...
*மகன்:* அப்படியே ஆகட்டும் தந்தையே....
தந்தை சொன்னது போன்று மகன் மூன்று முறை சுத்தி வந்துவிட்டு தந்தையிடம்:
*மகன்:* நீங்கள் கூறியது போன்று நான் ஒரு துளியும் சிந்தாமல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டேன்.
*தந்தை:* மிக்க மகிழ்ச்சி... இந்த போட்டி பற்றி உன்னிடம் 3 கேள்விகளை கேட்கின்றேன் பதில் சொல்லவேண்டும்.
*1 - நீ போட்டியின் போது யாராவது செல்போன் பயன்படுத்துவதை பார்த்தாயா?*
*2 - யாராவது புறம் பேசுவதை கேட்டாயா?*
*3 - யாரவது பித்அத் செய்வதை கண்டாயா?*
*மகன்:* நான் எதையும் பார்க்கவில்லை, கேட்கவில்லை... எனது கவனம் முழுவதும் தண்ணீர் கீழே சொட்டிவிடக்கூடாது என்பதிலேயே இருந்தது, அதனால்தான் என்னால் போட்டியில் வெற்றி பெற முடிந்தது.
*தந்தை:* 
இதேபோன்று *உனக்கு எதிரில் அல்லாஹ் இருக்கின்றான்,* 
*அவன் என்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்து தொழுக பழகு.* 
*உன் கவனம் சிதறாது.* 
*எப்போதும் படைத்த இறைவனை நினைத்துக்கொள்,*
*இமாமின் உரையின் போது தேவையற்றவைகளை பார்க்காதே,*
இனி பள்ளிக்குசெல் உன் கவனம் சிதறாது.
*மகன்:* மிக்க நன்றி தந்தையே நான் செய்ய இருந்த மிகப்பெரிய தவறை மிக நல்லமுறையில் எனக்கு எடுத்துக்கு கூறி எனக்கு நல்லவழியை காட்டிய உங்களுக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக!!!

Face Book இல் வாசித்தது

2 கருத்துரைகள்:

Saudi போன்ற நாடுகளில் 'குத்பா' மிக பயனுள்ள தலைப்பை கொண்டிருக்கும் கேட்டு பலனடைய கூடியதாய் இருக்கும் சில மச்ஜித்களில் English ம் கூட sermon இருக்கும், சொல்கின்ற இமாம்கள் அருமையாக சொல்வார் அவர்கள் முகங்களில் அவ்வளவு ஜீனத் இருக்கும் Mashallah, சில மச்ஜிட்கள் எனக்கு சுவனம் போல் இருக்கும், இப்படி ஒரு மஸ்ஜித் இல் இந்த பொடியன் இருந்தால் வாப்பா நான் வீட்டுக்கு வர மாட்டேன் இந்த மச்ஜிடிலே இருக்கிறேன் என்று சொல்லியிருப்பான். இன்னொரு matter உண்டு அடுத்த கமெண்ட் இல் எழுதுவேன் In Sha Allah

கடந்த February 2019 இல் Lanka வில் ஒரு குத்பா கேட்டேன், topic என்ன தெரியுமா Valentine's Day, இதை சொன்னவர் ஜமாதாருக்கு அறிவுரை சொல்வடைவிடவும் தனக்கு Valentine's Day என்றால் என்னவென்று பெரிய அளவில் தெரியும் என்பதை காட்டிகொள்ளும் Pada Show ஒன்றைத்தான் அங்கு காட்டினார், எனக்கு ஏண்டா இங்கே வந்தேன் வேறொரு masjid க்கு போயிருக்கலாமே என்று தோன்றியது, இந்த விடயத்தை ஓரிரு வார்த்தைகளில் முடிதிருக்கலாம் அவர் ஒரு ஜூம்மாவை waste பண்ணிபுட்டார். So குத்பாக்கள் இந்த லட்சணத்தில் இருந்தால் வப்பமாரே வா மகனே நாங்க வீட்டுக்கு போய் ஜமாஅத் தொழுகை start பண்ணும்போது வருவோம் என்று சொல்லிய்ருப்பார்.

Post a comment