Header Ads



தந்தை + சகோதரரின் ஜனாசா நல்லடக்கத்திற்கு வந்த குண்டடிப்பட்ட சிறுவன்


உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அமைதி தேசம் என அழைக்கப்படும் நியூசிலாந்தில் இடம்பெற்ற இரண்டு பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வெள்ளை இன மேலாதிக்கவாதி நடத்திய அந்த தாக்குதலில் பலியான சிரிய அகதிகளான தந்தையும் மகனும் முதல்கட்டமாக நடந்த ஒரே இறுதி நிகழ்வில் அடக்க செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட மசூதியின் அருகில் உள்ள இடுகாட்டில் கூடிய நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள், சிரிய அகதிகளான காலித் முஸ்தபா மற்றும் அவரது 15 வயது மகன் ஹம்சா இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

Body of a victim of the mosque attacks arrives during the burial ceremony at the Memorial Park Cemetery in Christchurch, New Zealand March 20, 2019

அப்போது அவர்களது பெயர் ஒலிப்பெருக்கியில் தெரிவிக்கப்பட்டது.

இதில் கொல்லப்பட்ட காலித்தின் மற்றொரு மகனான 13வயது சையத் குண்டடிப்பட்ட நிலையில் இரங்கல் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

“நான் உங்கள் முன் நிற்கவேண்டியவன் கிடையாது, உங்களுடன் படுத்திருக்க வேண்டியவன்,” என தந்தை மற்றும் அண்ணனின் முன்நின்று சையத் வருந்தியதாக இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட ஜமில் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

Zaid Mustafa in a wheelchair at the funeral for his father and brother

கடந்த ஆண்டு சிரியாவிலிருந்து அகதிகளாக நியூசிலாந்துக்கு வந்த காலித் குடும்பம், போர்முனையிலிருந்து தப்பி தஞ்சமடைந்த நிலத்தில் பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில், உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதால் இஸ்லாம் முறைப்படி உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை முறையாக உறுதி செய்யும் வேண்டும் என்பதால் உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் மைக் புஷ் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments

Powered by Blogger.